நம்பிக்கையோடு செயல்படுங்கள்!
தொழில் செய்வதாகட்டும், கை கட்டி வேலை செய்வதாகட்டும் எதுவாக இருந்தாலும் சரி எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது நம்பிக்கை தான்.
நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். எல்லாமே நம்பிக்கையில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.
தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று வந்தவர்கள் நாம். நமக்கு இன்னும் அதிகமான நம்பிக்கை வேண்டும். ஒவ்வொன்றிலும் நம்பிக்கை வேண்டும்.நாட்டின் மீது நம்பிக்கை வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை வேண்டும்.
மக்கள் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களைச் சரிவர கவனிப்பதில்லை. சீனர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பவர்கள் நமக்கு மட்டும் கொடுக்க மாட்டார்களா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நாம் அவர்களைக் கவனிக்காவிட்டால் அவர்களும் நம்மை உதாசீனப்படுத்துவார்கள் என்பது தான் உண்மை.
தொழில் செய்கிறவர்கள் மக்களை நம்ப வேண்டும். நாம் அவர்களை நம்பினால் தான் அவர்கள் நம்மை நம்புவார்கள். இது ஒரு வழி சாலை . இல்லை. கிடைத்தால் போதும் என்கிற எண்ணம் எழக் கூடாது.
நம்பிக்கை தான் தடைகளை முறியடிக்கும். எப்போதும் இலக்குகளை வைத்து செயல்பட வேண்டும். ஓர் இலக்கை வைப்பதே நம்பிக்கை தான்.
நாம் எல்லாருமே நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையோடு தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழிலும் அதே சிந்தனை தொடர வேண்டும். தொழில் செய்வோருக்கு அந்த நம்பிக்கை இன்னும் அதிகம் வேண்டும். நம்பிக்கை தளர்ந்தால் தொழில் ஆட்டம் கண்டு விடும்!
நம்மால் முடியும் என்கிறோமோ அது தான் நம்பிக்கை. நம்மால் முடியும் என்னும் எண்ணத்தை எப்போது வளர்த்துக் கொள்கிறோமோ அது தான் நம்பிக்கை. எண்ணம் போல் வாழ்வு வாழ வேண்டுமென்று நினைத்தால் போதாது. அதற்கான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே நம்பிக்கையோடு செயல்படுங்கள். உங்களின் நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்து ,கொள்ளுங்கள்.
நம்பிக்கையே வாழ்க்கை!
No comments:
Post a Comment