பணம் ஒரு பிரச்சனை அல்ல!
வியாபாரம் செய்யத் துணிந்துவிட்டவனுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல!
உங்கள் பணத்தைப் போட்டுத் தான் ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள். அப்போது பணம் உங்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல. எப்படியும் முதல் முதலீடு என்பது உங்களுடையதாகவே இருக்கும். அதில் எந்த சமரசமும் இல்லை.
உங்களுக்குப் பணப் பிரச்சனை என்பது எப்போது ஆரம்பிக்கும்? உங்கள் வியாபாரம் பெருகும் போது, உங்களது வியாபாரத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் போது பணம் என்பது ஒரு பிரச்சனையாக எழும்.
அதனை நீங்கள் மிக எளிமையாகக் கையாளலாம்.
நீங்கள் உங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கும் போதே - அந்த முதல் நாளிலிருந்தே - உங்களின் வரவு செலவுகளை எழுதி வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்துவிடுங்கள். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு சில ஆயிரங்கள் போட்டு வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களுடைய கணக்கு வழக்குகளை எழுதுவது என்பது சாதாராண விஷயம். மிகவு ம் அத்தியாவசியம் கூட. உங்கள் வருமானத்தை வருமானவரித் துறைக்கும் அறிவித்து விடுங்கள்.
நீங்கள் வியாபாரம் செய்வது உங்கள் முன்னேற்றத்துக்குத் தானே தவிர யாருடைய முன்னேற்றத்துக்கும் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் அனைத்து ஆவணங்களும் 'பக்கா' வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பொய், ஏமாற்று வேலைகள் வேண்டாம்.
உங்களுடைய ஆவணங்கள் சரியாக இருந்தால் வங்கிகள் கடன் கொடுக்கத் தயாராக இருக்கின்றன. வங்கிகளை ஏமாற்ற முடியாது. உங்களுடைய தொழிலை மேம்படுத்த வங்கிகள் உதவிகள் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இங்கு சொல்லப்படுபவை எல்லாம் உண்மையாகவே தொழில் செய்து பிழைக்க நினைப்பவர்களுக்கு மட்டும் தான். அரைகுறைகளுக்கு அல்ல. சும்மா "செஞ்சிப்பாப்போமோ!" என்பவர்களுக்கு அல்ல.
தொழில் என்பது அக்கறை, நாணயம், ஈடுபாடு, முன்னேற்றம், முனைப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தான்.
பணமா? அது பிரச்சனை அல்ல! தொழில் செய்ய வந்து விட்டோம் அப்புறம் என்ன அது பிரச்சனை, இது பிரச்சனை?
எல்லாவற்றையும் சமாளித்து முன்னேறுவது தான் தொழில்!
No comments:
Post a Comment