சேமிப்பு அவசியமா...?
தொழில் செய்பவர்களுக்கு சேமிப்பு அவசியமா என்னும் கேள்வி எழுவது நியாயம் தான்.
எல்லாவற்றுக்கும் ஓர் ஒழுங்குமுறை உண்டு. அதே போல நீங்கள் வேலை செய்தாலும் தொழில் செய்தாலும் அந்த ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
சேமிப்பு என்பதை யாரும் ஒதுக்கிவிட முடியாது. அது இளம் வயதிலேயே ஒவ்வொரு குழந்தைக்கும் சேமிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் கடமை.
சேமிப்பு என்று வருகிற போது சீனர்கள் தான் நம் கண் முன்னே நிற்பவர்கள். சேமிப்பைப் பற்றியான அதிகமான விழிப்புணர்வைப் பெற்றவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும். ஆரம்பகாலங்களில் பஞ்சத்தால் அடிபட்டு வந்து சேர்ந்த அவர்களுக்குத் தான் சேமிப்பின் அருமை தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்.
ஏழ்மை நிலையில் இருந்த ஒரு சீன குடும்பத்தை அறிவேன். ஒரு மகன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஓரு கணினி வாங்க வேண்டும். தாய்க்கு ஒரு கடையில் வேலை. பாட்டி பழைய பேப்பர்களையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வருவார். அவைகளையெல்லாம் விற்று காசாக்குவார். போதுமான பணம் சேர்ந்ததும் தாயும், பாட்டியும் பையனுக்குக் கணினி வாங்க வந்தார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர் கொண்டு வந்த நோட்டுக்கள் அனைத்தும் தினசரி சேர்த்து வைத்த பணம். அத்தனையும் கசங்கிய நோட்டுக்கள். எல்லாம் ஒரு வெள்ளி, ஐந்து வெள்ளி, பத்து வெள்ளி அத்தோடு ஷில்லிங் காசுகள்!
நமது இனத்தவர்களாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? பையனின் படிப்பையே நிறுத்தியிருப்பார்கள்! கணினியே வேண்டாம் என்றிருப்பார்கள். யாராவது தலைவன் வந்து உதவ மாட்டானா என்று தலைவனுக்காக காத்திருப்பர்கள். பத்திரிக்கையிலே அறிக்கை விடுவார்கள்! அவர்களின் கஷ்டத்தைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பிடிங்கி திங்க ஒரு குழு வேலை செய்யும்! ஆனால் உழைப்பும், சேமிப்பும், தன்னம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள்!
நமக்கு உழைப்பும் வேண்டும், சேமிப்பும் வேண்டும். என்ன தான் சிறிய வேலையோ, சிறிய தொழிலோ சேமிப்பு மிக மிக அவசியம்.
சேமிப்பை கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment