நானும் பார்த்ததில்லை! அறிந்ததில்லை! தெரிந்தது எல்லாம் ஒரு பாடலின் வரி "வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்" அவ்வளவு தான்!
வெட்டிவேர் வெறும் வாசமிக்கது மட்டுமல்ல. அது பல மருத்துவ குணங்கள் கொண்டது. வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பாய், தலையணைகள், காலணிகள் என்று பலவேறு வகையில் பயன் தர வல்லது.
இவ்வளவு பயன் இருந்தும் என்ன செய்வது? கொரோனா ஊரடங்கு, அனைத்தையும் முடக்கிப் போட்டுவிட்டது!
தமிழ் நாடு, கடலூரில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்து இரண்டு, மூன்று மாதங்களாக வெட்டிவேரின் விற்பனை முடங்கிப் போய், விவசாயிகள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம்.
பொறியியல் பட்டதாரியான பிரசன்னகுமாரும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்தனர். வெட்டிவேரில் முகக் கவசம் செய்ய முடிவெடுத்தனர்.
வெட்டிவேரில் செய்யப்படும் முகக்கவசம் ஒன்று வாசமாக இருக்கும். ஒரு முறை பாவித்ததை துவைத்துவிட்டு மீண்டும் பாவிக்கலாம். நாற்றமெடுக்காது. வெட்டிவேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், நுரையீரலையும் தூய்மையாக வைத்திருக்கும் என்பது பாரம்பரியம்.
இப்போது வெட்டிவேர் முகக்கவசம் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஒரு பிரச்சனை வந்த போது அதனை வேறு ஒரு வழியில் தீர்வு கண்டார்களே அந்த இளைஞர்களுக்கு நமது பாராட்டுகள்!
எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு. நம்பிக்கைக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment