Ice Skating: Sri Abirami dances her way to second spot in Narva Cup 2021
சமீபத்தில் எஸ்தோனியாவில் நடைபெற்ற 2021 ஆண்டுக்கான நர்வா கிண்ண பனிசறுக்கு போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றிருக்கிறார் நம் நாட்டு இளம் வீராங்கனை ஸ்ரீஅபிராமி சந்திரன் பாலகிருஷ்ணன்.
ஐரோப்பாவில் நடைபெற்ற இந்த பனிசறுக்கு விளையாட்டில் முதன் முதலாக பங்குப்பெற்று அதில் இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கத்தை வென்றதில் தனக்கு மகிழ்ச்சி என்கிறார் அபிராமி.
இந்த போட்டியில் நான் வெற்றி பெற வேண்டும் என்று எனக்காக வாழ்த்திய அத்துணை மலேசியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என அபிராமி தெரிவித்துக் கொண்டார்.
வருங்காலங்களில் அவர் உலகளவில் இன்னும் பல போட்டிகளில் பங்குப்பெற்று வெற்றிபெறவும் மலேசியாவுக்குப் பெருமை சேர்க்கவும் ஸ்ரீ அபிராமிக்காக நாம் வேண்டிக் கொள்வோம்!
மேலும் மேலும் வெற்றி பெற எமது வாழ்த்துகள்!
No comments:
Post a Comment