Wednesday 17 November 2021

இந்திரா காந்தி வழக்கில் அலட்சியமா?

                  திருமதி இந்திரா காந்தி, Ingat  தலைவர் அருண் துரைசாமி, 

திருமதி இந்திரா காந்தியின் மகள் மீதான வழக்கில் காவல்துறை வேண்டுமென்றே இழுத்தடித்துக்  கொண்டிருப்பது நமக்கு  சலிப்பை ஏற்படுத்தினாலும் தாய்க்கு அப்படியெல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை. அவருக்குத் தனது குழந்தையைப் பார்க்க வேண்டும், அது மட்டும் தான்.

இதுவரை நடந்தவை:

முகமட் ரிட்வான் அப்துல்லா எப்போது நாட்டைவிட்டு ஓடிப்போனார்?
-  2014 ம் ஆண்டு!

போலிஸார் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?
-  முடியவில்லை!

அவர் 2015 ம் ஆண்டு மெர்செடீஸ் காரும் 2017 - ம் ஆண்டு நிசான் காரும் அவரது  பெயரில் மலேசியாவில் வாங்கியிருக்கிறார். வெளி நாட்டுக்கு ஓடிப்போனவர் எப்படி இங்கே கார் வாங்கினார்?
- தெரியாது!

கார் வாங்கினால் பதிவு செய்ய வேண்டும், பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,  பணம் கட்ட வேண்டும் இதையெல்லா போலிஸ் விசாரிக்கவில்லையா?
- தெரியாது!

அவருடைய கார் உரிமம் இன்னும் நடப்பில் இருக்கிறது.  2022-ல் உரிமம் புதிப்பிக்கப்பட்டு இப்போது மீண்டும் மே மாதம் 27-ம் தேதி புதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் மலேசியாவில் இல்லை என்றால் அவர் ஏன் தனது உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்?
- தெரியாது!

அவர் மலேசியாவில் இல்லை என்றால் அவரால் எப்படி தனது உரிமத்தை புதிப்பிக்க முடியும்?
- ஆன்லைன் வழியாகப் புதுப்பிக்கலாம்.

அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து ஊழியர் சேமநிதி வெட்டப்பட்டிருக்க வேண்டும். வருமானவரி கட்டப்பட்டிருக்க வேண்டும்.  இவைகளை வைத்து அவரைக் கண்டுபிடிக்க போலிஸ் எந்த முயற்சியும் செய்யவில்லையா?
-  முயற்சி செய்தார்கள். அவர் வேலை செய்த நிறுவனம் கைமாறிவிட்டது!

நிறுவனத்தின் பெயர் தேவையில்லை. ஊழியர் சேமநிதி, வருமானவரி பணம் கட்டப்பட்டால்  அவ்ர் இங்கு மலேசியாவில் வேலை செய்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? அவர் இங்கு வேலை செய்யாமல் அவரால் எப்படி இரண்டு கார்களை வாங்க முடியும்?
.- பதிலில்லை!

அவருடைய இரண்டாவது மனைவியும், நான்கு பிள்ளைகளும் (மூன்று வயதிலிருந்து பத்து வயது வரை) இப்போது எங்கு இருக்கிறார்கள்?
-    போலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை!அவர்கள் சென்ற ஆண்டு          தாய்லாந்து போனார்கள்!

அப்படியென்றால் அவர் கணவரும் அங்கு தான் இருப்பார் என்று சொல்ல வருகிறீர்களா? ஒன்றரை ஆண்டு ஆகியும் அவர்கள் ஏன் நாடு திரும்பவில்லை. அவருக்கு அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா?  அங்கு தங்க வேண்டுமென்றால் அதற்கான  அனுமதி பெற்றிருக்கிறார்களா? போலிஸார் இதனை எல்லாம் விசாரிக்கவில்லையா?   பேங்க் நெகரா மூலம்  அவருடைய வங்கி கணக்குளை அறிய போலிஸார் முயற்சி எடுத்தனரா?
-  போலிஸார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை!



ஆக, போலிஸார் எதையும் செய்யவில்லை!  சும்மா ஒப்புக்கு எதை எதையோ செய்து கொண்டு, ஒப்புக்கு எதை எதையோ கோர்ட்டில் சொல்லிக் கொண்டு சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. ரிட்சுவான் மலேசியாவில் தான் இருக்கிறார். அவரது இரண்டாவது மனைவியும், குழந்தைகளும் மலேசியாவில் தான் இருக்கிறார்கள். அவர் இங்கு தான் வேலை செய்கிறார்.ஆனாலும் போலிசாருக்கு மட்டும் எந்த விபரமும் கிடைக்கவில்லை.

மேலே  கொடுத்த அனைத்து தகவல்களும் அருண் துரைசாமி தலைமையாலான இங்காட் முலம் சேகரிக்கப்பட்டவை! 

இந்த மாதிரி போனால் இந்த வழக்கு எப்போது முடியும் என்று சொல்லுவதற்கில்லை! அரசாங்கம் நினைத்தால்  முழு பூசணிக்காயையே சோற்றில் மறைக்கலாம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது!



No comments:

Post a Comment