Thursday 4 November 2021

சிக்கனத்தின் தேவை!

 


தீபாவளி ஒரு மகிழ்ச்சிகரமான  தினம்.  சிறுவர் பெரியவர் அனைவருக்குமே மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் தினம்.

ஆனால் இந்த ஆண்டு அனைவருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்குமா  என்றால் அப்படி சொல்வதற்கில்லை. கோவிட்-19 பல குடும்பங்களுக்குத் துயரத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பலருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகவே நிற்கிறது.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அன்றும் சரி இன்றும் சரி உங்களிடம் உள்ள சேமிப்புப் பணம் தான் உங்களைக் காப்பாற்றும். உங்கள் அண்ணன் வீட்டுப் பணமோ, அண்டை வீட்டுக்காரரின் பணமோ உங்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.  அவர் அவர்களுக்கு அவர்கள் வீட்டுப் பிரச்சனைகள் தான் முக்கியம்.

பெருநாள் காலம் என்பதற்காக 'தாம்!தூம்!' என்று நமது பணத்தை தண்ணீராக  செலவழிக்க முடியாது. தேவை என்றால் மட்டும் செலவழியுங்கள். உங்கள் குடும்பத்திற்காக அந்த செலவுகள் இருக்கட்டும். 

இந்த கோவிட்-19 காலக்கட்டத்தில் பணம் கையில் வைத்திருந்தவர்கள் பட்டியானால் சாகவில்லை. யாருடைய உதவியும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு உதவினார்கள். மற்றவர்களுக்கு உதவுவது நமது மனிதாபிமானம். அதற்கு நாம் கணக்குப்பார்க்கக் கூடாது.

இந்த தீபாவளி திருநாளில் கணக்குப் பார்த்து பணத்தைச் செலவு பண்ணுங்கள். உங்களுக்கு வள்ளல் என்கிற அடையாளம் தேவை இல்லை.  அதற்கான நேரம் வரும்போது அப்போது அந்த அடையாளத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இன்றைய தினம் ஒரு சிக்கன தீபாவளியாக இருக்கட்டும்! வாழ்த்துகள்!


No comments:

Post a Comment