பாஸ் கட்சியினருக்கு எப்போதுமே ஒரு தாழ்வுமனப்பான்மை உண்டு!
சீனக் கட்சிகள் தங்களோடு இருக்கும் போதெல்லாம் அவர்களை வானளாவப் புகழ்வார்கள். அவர்களுடைய எதிர் அணியில் இருந்தால் ஒரேடியாக அவர்களை இகழ்வார்கள்.
இது அவர்களின் இயல்பான குணம். ஆனால் அவர்களின் புகழ்ச்சியை வஞ்சகப் புகழ்ச்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் இதயத்தில் இருந்து வருவதாக எடுத்துக் கொண்டால் அது நம்முடைய குற்றம்!
பொதுவாகவே பாஸ் கட்சியினர் குறுகலான மன இயல்பு உடையவர்கள்! அவர்கள் எப்போதுமே ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்து பழகிவிட்டதால் அவர்களால் வெளியே வந்து சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை!
இப்போதைய நடப்பு அரசாங்கத்தில் அவர்கள் பங்கு பெற்றிருப்பதால் இப்போது அவர்களின் உண்மையான குணாதிசயங்களைக் காண முடிகிறது! ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் போது ஆன்மீகம் தான் அவர்களின் வழி. அந்த வட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டால் அம்னோ அரசியல்வாதிகளின் வழிதான் எங்கள் வழி! இப்போது அவர்கள் மற்ற பாஸ் அரசியல்வாதிகளுக்கும் பிழைக்கும் வழியைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்!
கெடா மாநிலத்தில் நான்கு இலக்கம் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அது பற்றி பாஸ் கட்சியினர் கருத்துரைக்கும் போது "நாங்கள் தடை செய்வதைக் குறை சொல்லுகிறீர்களே! சீனா கூட இது போன்ற சூதாட்டங்களைத் தடை செய்திருக்கின்றனரே!" என்று சீனர்களைப் பார்த்துக் கேட்கின்றனர்.முதலில் இது சீனர்களுக்கான விளையாட்டு மட்டும் அல்ல. அனைத்து மலேசியர்களுக்கான, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விளையாட்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அப்படி என்றால் சூதாட்டத்தைத் தடை செய்த சீனா ஒரு சிறந்த ஒழுக்கமுள்ள நாடு என்று தானே நீங்கள் போற்ற வேண்டும். ஆனால் கம்யுனிஸ்ட் நாடு என்றும் சீனர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று தூற்றுவதும் நீங்கள் தானே! சூதாட்டத் தடையைப் பின்பற்றும் சீனா, மக்களையோ நாட்டையோ ஏமாற்றும் பணக்காரர்களுக்கு உடனடி தண்டனைக் கொடுப்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் அதைச் செய்யலாமே! உங்களால் முடியுமா? ஏமாற்றுவதற்கு உங்களுக்கு நிகர் யார்!
உண்மையைச் சொன்னால் மக்களை ஏமாற்றுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை! அதனால் உண்மையைச் சொல்லி அரசியல் பண்ணுங்கள். யாருக்கும் பயப்படும் அரசியல் வேண்டாம்! நாம் அனைவரும் சமமானவர்கள். யாருக்கும் பயந்து பயந்து அரசியல் செய்ய வேண்டாம்!
அதுவே அனைவருக்கும் நல்லது!
No comments:
Post a Comment