Wednesday 24 November 2021

கலவையான தடுப்பூசியா?

 

                                                கலவையான மருந்துகளால் ஆபத்தா?

மூத்த குடிமக்களுக்கான தடுப்பூசியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தடுப்பூசி என்பதைவிட பூஸ்டர்  தடுப்பூசி என்பது தான் சரி. ஆரம்பத்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களுக்கு இன்னும் பூஸ்டர் தடுப்பூசி  போடப்படவில்லை என்றே நினைக்கிறேன். முதலில் வந்த அறிவிப்பின் படி தடுப்பூசி போட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடுவதாக அறிவிப்பு வந்தது. இன்றைய நிலைமை தெரியவில்லை.

ஆனால் சைனோவேக் தடுப்பூசி போட்டவர்களில் நானும் ஒருவன்.  தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. எனக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அழைப்பு வந்தது. நான் சைனோவேக்  தடுப்பூசி தான் போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பைசர் தடுப்பூசி  போடப்பட்டது. அதனை நான் டாக்டரிடம் சுட்டிக் காட்டினேன். அவர் சுகாதார அமைச்சு சொன்னதைத்தான் செய்கிறோம் என்றார்.

அதனைப்பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ள  ஒன்றுமில்லை! முதன் முதலில் நான் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது அது என்ன தடுப்பூசி என்று கூட கேட்கவில்லை.  இரண்டாம் முறை போன போது தான் அது சைனோவேக் என்று தெரிந்து கொண்டேன்.

நான் என்ன தடுப்பூசி என்பது பற்றி அக்கறை காட்டாததற்குக் காரணம்  உண்டு. அது சைனோவேக் என்றாலும் சரி பைசர் என்றாலும் சரி நான் மட்டுமா போடுகிறேன். உலகம் பூராவும் கோடிக்கணக்கான மக்கள் போடுகிறார்கள். அதில் நானும் ஒருவன் அவ்வளவுதான்! இதில் என்ன அந்த மருந்து, இந்த மருந்து! இது நல்லது, அது நல்லது! அரசாங்கமும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தான் தடுப்பூசியைப் போடுகிறார்கள். அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால் அனைத்துமே முடங்கிப் போகும்!

சைனோவேக் மருந்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டது உண்மை என்பதை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொண்டது.  சைனோவேக் தடுப்பூசி போட்டவர்களுக்கு  உடம்பில் ஒரு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதாக அமைச்சு கூறியது. அதனாலேயே பூஸ்டர் ஊசியை மூன்று மாதங்களில், அதுவும் மாற்றி பைசர் தடுப்பூசியை, போடுவதாக அமைச்சு கூறியது.

எனது குடும்பத்தில் எனக்கு ஒருவனுக்குத் தான் பூஸ்டர் பைசர் தடுப்பூசி போடப்பட்டது. மற்றவர்கள் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டதால் இன்னும் அவர்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசி போடப்படவில்லை.

என்னைப் பொறுத்தவரை இப்படி மாற்றி தடுப்பூசி போட்டதால் எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. எந்த ஒரு மாற்றமும் இல்லை. எல்லாமே வழக்கம் போல தான்! கலவையாக இருந்தால் இருக்கட்டுமே! கவலைப்படுவதாக இல்லை!

No comments:

Post a Comment