ராஜ ராஜ சோழன் நான்!
ஆமாம்! இதனை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் அந்த மாமன்னரின் பரம்பையினர்.
ஒரு காலகட்டத்தில் இந்திய நாடே அவர் கையில் இருந்தது. அத்தோடு பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று அந்த நாட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பக்கம் இந்தோனேசியா, மலேயா தீபகற்பம் என்று அனைத்துப் பகுதிகளிளும் கால்பதித்திருக்கிறார்.
ஆனால் எந்த நாட்டையும் அவர் அடிமைப்படுத்தவில்லை. அது தான் தமிழர் மாண்பு. அது அவரிடமிருந்தது.
நாம் சோழர் பரம்பரையினர் என்பதில் நமக்குப் பெருமை. நாம் கோழைகள் அல்ல. வீரப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதிலே மகிழ்ச்சியே.
இங்கு நான் சரித்திரம் பேச வரவில்லை. நாம் எப்படிப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள், எப்படி வாழ வேண்டும், எப்படி நாம் மற்றவர்க்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதிலே தான் நான் கவனம் செலுத்துகிறேன்.
நம்மிடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. அது எப்போதும் உள்ளது தான். ஆனால் அதிலேயே ஆழ்ந்து போக வேண்டிய அவசியமில்லை. அதிலிருந்து விடுபட்டு நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற வைராக்கியத்தோடு மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.
துணிவு, சக்தி நம்மிடம் இயற்கையாகவே உள்ளது. அது நாம் வீரப்பரம்பரையினர் என்பதைக் குறிக்கிறது. நாம் நாடுகளைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அதெல்லாம் தேவை இல்லை.
நாட்டின் பொருளாதாரத்தைப் பிடிப்பது தான் மாபெரும் சக்தியாக இருக்கிறது. நமது பொருளாதாரம் நம் கையில். நம் இனத்தின் பொருளாதாரம் நமது இனத்தின் கையில். இந்தக் கோட்பாட்டில் தான் சீனர்கள் பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றனர். அதனால் தான் அவர்களை - சீனர்களை பொருளாதாரத்தில் மிஞ்ச ஆளில்லை. அவர்கள் இனத்தவரிடம் தான் அவர்கள் பொருள்களை வாங்குகிறார்கள். அவர்களுடைய பொருளாதாரம் அவர்களுக்குள்ளேயே தான் சுற்றிச் சுற்றி வருகிறது. நம்மாலும் முடியும்.
மறந்து விடாதீர்கள்! நாம் ராஜ ராஜனின் பரம்பரையினர்!
No comments:
Post a Comment