கல்வி கற்காதவர் நிலை என்ன? இன்று இந்நாட்டில் செய்யப்படுகிற அனைத்துக் கீழ்மட்ட வேலைகளையும் நாம் தான் செய்கின்றோம். அப்படி செய்தாலும் கூட அதற்கான சம்பளத்தைக் கூட முழுமையாகப் பெற முடிவதில்லை.
யாரும் செய்யக்கூட துணியாத வேலை அதனை நாம் செய்கிறோம். அதற்கான கூலி என்பது மிக மட்டம்.
அதற்குத்தான் நாம் படித்தவர்களாக இருக்க வேண்டும். எப்போதும் நம்மிடம் ஒரு சவால் தனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். யாரும் செய்யத் தயங்கும் சில வேலைகளை நாம் செய்கிறோம். பார்க்கப்போனால் அந்த வேலைகளைச் செய்வதற்கு நமக்கு அதிகம் சம்பளம் தர வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? நாம் குடிகாரர்கள். எவ்வளவு கொடுத்தாலும் அதனை குடித்துத் தீர்க்கப் போகிறோம்! எவ்வளவு கொடுத்தால் என்ன?
முன்னைய நிலைமையை விட இன்றைய நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. காரணம் இப்போது வேலை கிடைப்பதில் பிரச்சனைகள் எழுகின்றன. அதனால் எது கிடைத்தாலும் சரி என்கிறை மனப்பானமையை விட்டு ஒழிக்க வேண்டும்.
நாம் கௌரவமிக்க ஓர் இனம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் என்ன தான் கீழ்மட்டத்தில் இருந்தாலும் நாம் பிழைப்புக்காக பல வேலைகளைச் செய்கிறோம். அதிலும் கண்ணியம் இருக்க வேண்டும்.
எங்கும் போக வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள சீனர்களைப் பாருங்கள். சீனப் பெண்மணிகளைப் பாருங்கள். அவர்களிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன வேலைகள் செய்கிறார்கள் பாருங்கள். நாமும் அவர்களைப் போன்று ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதிலே கவனம் செலுத்த வேண்டும்.
சீனர்கள் எதைச் செய்தாலும் குறைவான சம்பளத்தில் வேலை செய்வதில்லை. வருமானம் அவர்களுக்கு முக்கியம். ஆனால் நமக்கோ எது முக்கியம் என்கிற தெளிவே இல்லை. ஏதோ கிடைத்தால் போதும். தொழிலில் வருமானமும் வேண்டும், கௌரவமும் வேண்டும். நமது பிள்ளைகள் படிக்க வேண்டும். அவர்களுக்கும் கௌரவம் வேண்டும்.
நமக்கு வேலை கிடைக்கவில்லை என்பதைவிட கிடைக்கும் வேலையில் உண்மையாக உழைக்க வேண்டும். இந்நாட்டில் வேலையே இல்லை என்று சொல்வதைவிட என்ன வேலையை நாம் தேடுகிறோம் என்பதும் முக்கியம்.
நமது பெண்களுக்கு வேண்டியதெல்லாம் பெரும் பெரும் நிறுவனங்களில் வேலை. இப்படித்தான் மலாய்ப் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் சீனப் பெண்களைப் பாருங்கள். பெரிய நிறுவனங்களைத் தேடிப் போவதில்லை. எல்லாமே சிறிய நிறுவனங்கள், கடைகண்ணிகள் அங்குதான் அவர்கள் வேலைகளைத் தேடிப் போகின்றனர். அங்கு தான் கடுமையான கட்டுப்பாடுகள். நாமோ கட்டுபாடுகளை விரும்புவதில்லை! பொழுது போக்குக்காக வேலைக்குப் போகிறோம்!
இது போன்ற கடைகளில் வேலை செய்வதன் மூலம் ஓரளவு அவர்களின் தொழிலையும் நாம் கற்றுக் கொள்கிறோம்.
பெண்களே! வேலை தேவை தான்! அதில் கௌரவமும் வேண்டும்!
No comments:
Post a Comment