தெக்கூன் கடன் உதவி ஒரு காலத்தில் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
அந்த உதவி மலாய்க்கார வர்த்தகர்களுக்கு மட்டுமே எந்று தான் நாம் கணக்குப் போட்டு வைத்திருந்தோம். உண்மையில் அப்போதும் இல்லை. இப்போதும் இல்லை. அந்த நிறுவனத்தில் மலாய்க்கரர் அதிகம் பணிபுரிவதால் நம்மைப் புறக்கணிக்கும் போக்கு அதிக இருந்தது. அவர்களிடம் பற்றும் பாசமும் அதிகம் இருந்ததால் அது மலாய்க்காரருக்கே போய் சேர்ந்தது. ஆனாலும் அப்போதும் நம் இனத்தவருக்குக் கிடைக்கத்தான் செய்தன. கறக்கத் தெரிந்தவன் எங்கிருந்தாலும் கறந்து விடுவான்!
ஆனால் இந்த முறை இந்தியர்களுக்கென்றே தனியாக தெக்கூன் உதவி 3 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது நல்ல செய்தி. மூன்று கோடி என்பது ஒன்றும் பெரிய தொகை இல்லை என்று விமர்சனம் செய்யலாம். ஆனால் அதனை எந்த அளவுக்குப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியே! தெக்கூன் பக்கம் போவதைவிட மித்ரா பக்கம் போவதைத்தான் நமது வியாபாரிகள் விரும்புவார்கள்! திட்டுவதற்கு யாராவது வேண்டும் அல்லவா!
தெக்கூன் கடன் உதவி என்பது சிறு வியாபாரிகளுக்கானது. அவர்களுடைய அலுவலங்கள் நாடெங்கும் இருக்கின்றன. ஆனால் அந்த அலுவலகங்களில் இந்தியர்களும் பணிபுரியும் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 'மனு செய்ய ஆளில்லை!' என்று சொல்லி பணம் அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பபபடலாம்.
இப்போது மித்ராவால் சிறு வியாபாரிகளுக்கான கடன் உதவிகளைச் செய்ய முடியவில்லை என்று நமக்குத் தெரிய வருகிறது. கல்வி அமைச்சின் வேலைகளை அவர்களே கையில் எடுத்துக் கொண்டு செய்து வருகிறார்கள்! கொடுத்த மானியத்தை முடித்து வைக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்! சரி, ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள் இதுவும் சமுதாய நலன் தான்.
தொடர்ந்து நாம் குற்றச்சாட்டுக்களையே சுமத்தாமல் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இன்னொன்று எங்கே அவர்களின் அலுவலகங்கள் இருக்கின்றன என்கிற விபரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும். முடிந்தவரை இந்தியர் சிறு வியாபாரிகளின் சங்கம் சிறு வியாபாரிகளுக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உதவ வேண்டும்.
நமது வியாபாரிகள் வெற்றி பெற வாழ்த்துகள்!
No comments:
Post a Comment