எந்த உணவாக இருந்தாலும் வெளியே உணவகங்களிலோ அல்லது துரித உணவகங்களிலோ சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் நாம் சாப்பிடக் கூடாத ஏதாவது கலக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!
பலமுறை நாம் இது பற்றி பேசியிருக்கிறோம். யாரை நாம் குற்றம் சொல்லுவது? பணியாளர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அதாவது அதிருப்தி அடைந்த பணியாளர்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடும். யார் மீதோ உள்ள வன்மத்தை யார் மீதோ காட்டுகிறார்கள்! ஆனால் பாதிக்கப்படுபவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
மேலே நாம் பார்ப்பது துரித உணவகமான பிஸா உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்து வாங்கியது. அந்த உணவில் ஒரு காந்தக்கல் வருவதற்கான வாய்ப்பே இல்லை. காந்தம் எதுவும் அவர்களுக்குத் தேவைப்படுவதாகத் தெரியவில்லை. அப்படியென்றால் அது வலிந்து உணவில் திணிக்கப்பட்டிருக்கிறது என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.
பிஸா தயாரிக்கப்படும் இடத்திற்கு வெளியார் யாரும் போக எந்த நியாயமுமில்லை. தயாரிக்கப்படும் இடத்தில் குறிப்பிட்ட ஒரு சிலர் தான் அதனைக் கையாள்வார்கள். அங்கே உள்ள யாரோ ஒருவர். என்ன செய்வது? பொறாமை காரணமாக இருக்கலாம். யாரையோ பழிவாங்குவது காரணமாக இருக்கலாம். அந்த பிஸா நிறுவனத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இப்படி பல காரணங்கள்!
பொறாமையால் எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. பழி வாங்கலாம். அது உங்களுக்கும் நடக்கும். இது இப்படியே நடந்து கொண்டு போனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.
உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு அதிருப்திகள் இருந்தால் அது பேசித்தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். தவறான முறைகளைக் கையாளவது சரியாகாது. இன்று நீங்கள் செய்தால் நாளை உங்களுக்கும் நடக்கும். ஏன்? நாளை நீங்களும் உணவகங்களை நடத்தலாம் அல்லவா?
எந்த உணவகங்களாக இருந்தாலும் சரி அல்லது துரித உணவகங்களாக இருந்தாலும் சரி உணவு மனிதர்கள் சாப்பிடுபவை. உணவுக்கு மரியாதைக் கொடுங்கள் என்பதுதான் நாம் கொடுக்கும் அறிவுரை. அதனை அசிங்கப்படுத்தாதீர்கள். யாரோ செய்கின்ற தவறுகளுக்காக வாடிக்கையாளர்களைப் பழிவாங்காதீர்கள்.
பெரியவர்கள் எப்படியோ சமாளித்து விடுகிறார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் என்னவோ ஏதோ என்று சாப்பிடத்தான் செய்வார்கள். அது அவர்கள் உடல் நலனைப் பாதிக்கும். நினைத்துப்பார்க்க முடியவில்லை.
பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என்பது தான் எங்களின் செய்தி.
No comments:
Post a Comment