இது அதிர்ச்சி தரும் செய்தி தான்!
கடந்த இருபது ஆண்டுகளில் மலேசியாவில் மாரடைப்பால் ஏற்பட்ட மரணம் தான் அதிகம் என்பதாக புள்ளி விபரத்துறை அதிர வைத்திருக்கிறது. அதிர்ச்சி தான் என்ன செய்வது?
இதற்கு முக்கிய காரணம் மலேசியர்களின் உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே. அதாவது ஒழுங்கற்ற உணவு முறை.
மருத்துவர்கள் அடிக்கடி சொல்லுகின்ற ஓரு காரணம் சிகிரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் என்பது தான். சொல்லிவிட்டு அவர்களும் சிகிரெட் பிடிப்பதை நிறுத்தவதில்லை! நோயாளியும் நிறுத்துவதில்லை! யார் பிடித்தாலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்பது உண்மை.
ஆனால் மாரடைப்புக்கு சிகிரெட் மட்டுமே காரணம் என்பதாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான். வேறு வகையான தவறான உணவுகளும் காரணம். முடிந்தவரை மருத்துவர் சொல்லுகின்ற அறிவுரையைக் கேளுங்கள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சொந்தமாக சிகிச்சைப் பெற வேண்டாம்.
நான் சிகிரெட் பிடிப்பதில்லை. எனக்கும் ஓர் அடி விழுந்தது. மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான ஆப்ரேஷனும் நடந்தது. ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் என்னோடு ஆப்ரேஷனுக்காக காத்திருந்தவர்கள் என்னைவிட அனைவரும் இளம் வயதினர்! ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சிகிரெட் பிடிக்காதவர்கள் இன்னொரு பத்து, பதினைந்து ஆண்டுகள் தள்ளிப் போகலாம்! அது கொஞ்சம் கூடுதல் ஆதாயம் தானே!
இன்னொரு தகவலையும் புள்ளி விபரத்துறை கூறுகிறது. மாரடைப்பு, குறிப்பாக அதிகமாக இந்தியர்களுக்கும், மலாய்க்காரர்களுக்கும் ஏற்படுவதாகக் கூறுகிறது. சிகிரெட் மற்றும் உணவு முறைகளும் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சீனர்களோ அதிகம் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. காய்கறிகளில் அதிகம் இரசாயனம் கலப்பதும் காரணமாக இருக்கலாம்.
இதனைப் பேசிக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை. நம்மால் என்ன முடியுமோ அதனைச் செய்வோம். மருத்தவர்கள் சொல்லுவதை காது கொடுத்துக் கேட்போம். இப்போதைக்கு மருத்துவர்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை! அதற்காகப் பயந்து பயந்து வாழ வேண்டிய அவசியல் இல்லை. மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். நமது பணிகளைச் செய்வோம்.
அதற்கு மேல் 'மேலே' உள்ளவன் பார்த்துக்கொள்வான்!
No comments:
Post a Comment