Sunday, 19 March 2023

மகாதீரின் சாதனை என்ன?

 

டாக்டர் மகாதீர் சாதனைகள் தான் என்ன? வாய் கிழிய பேசும் அவர் அப்படி என்ன தான் சாதித்து விட்டார்?

கொஞ்சம் அலசிப் பார்த்தால் அவர் செய்ததெல்லாம் சாதனைகள் அல்ல வேதனைகள் தான்!

அவர் மலாய் சமூகத்திற்காக போராடியவர் என்று சொன்னாலும் அதனைக் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப் பார்த்தாலும் கூட அவரே இப்போது மலாய் சமூகம் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறது என்று அவரே தான் சொல்லுகிறார்!

அவர் செய்ததெல்லாம் அரசாங்க வேலைகளில் மலாய் சமூகத்தினருக்கு வேலைகளைக் கொடுத்தார்.  ஆனால் அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் அவலங்கள் மக்களுக்குத் தெரியும். எந்தவொரு வேலையும் குறித்த நேரத்தில் நடப்பதில்லை! அது தான் அவர் செய்த சாதனை!

கலவித்துறையில் மலாய் இளம் தலைமுறையினரிடையே  மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை என்றாலும் தரம் என்று பார்த்தால் தரமற்ற கல்வியைக் கற்றவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே! இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்குக் காரணமே டாக்டர் மகாதீர் தான்! மிகவும் தரமற்ற கல்வியைத்தான் அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது பொய்யல்ல!

இன்று பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்?  கல்வியில் தங்களுக்குச் சலுகை வேண்டும் என்று நினைக்கிறார்கள்! மருத்துவமா? சலுகை வேண்டும்!  வழக்காடு மன்றமா? சலுகை வேண்டும்! ஆசிரியர் தொழிலா? சலுகை வேண்டும்! நர்ஸிங் தொழிலா? சலுகை வேண்டும்!  தொழில் தொடங்க வேண்டுமா? சலுகை வேண்டும்!  என்ஜினியரிங் கல்வியா? சலுகை வேண்டும்! வீடு வாங்க வேண்டுமா? சலுகை வேண்டும்! இப்படித்தான் ஒவ்வொன்றிலும் தங்களுக்குச் சலுகை வேண்டும் என்கிற மனநிலையை டாக்டர் மகாதீர் ஏற்படுத்திவிட்டார்!

இப்பொது சலுகை இல்லாமல் தங்களால் வாழ நுடியாது என்கிற மனநிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்! இது எந்த வகையிலும் நாட்டிற்கு நல்லதல்ல! அவர்களின் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல! ஆனால் அதைத்தான் அவர் செய்திருக்கிறார்!

தன் கூட இருந்தவர்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்தியிருக்கிறார். அவர்களுக்குக் குத்தகை என்கிற பெயரில் எதையோ கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்திருக்கிறார்!மாஸ் விமானம் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற அந்த  நிறுவனத்தை தொழில் தெரியாதவனிடம் கொடுத்து அந்த நிறுவனத்தையே முடக்கி விட்டார்! இன்றுவரை அந்நிறுவனம் முடங்கி போய் தான் கிடக்கின்றது! அந்நிறுவனத்தை வைத்து கோடிக்கணக்கில்  கொள்ளையடித்தது தான் மிச்சம்!

இவர் காலத்தில் இவரால் மலாய் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் கொண்டுவர முடியவில்லை என்பது தான் நிதர்சனம். முன்னேற இலஞ்சம் வாங்க ஆதரவு கொடுத்தவர் இவர்தான்! சந்தேகம் வேண்டாம்!

டாக்டர் மகாதீர் மலாய் மக்களின்      மாபெரும் அழிவு சக்தி என்பது தான் உண்மை!

No comments:

Post a Comment