Sunday 5 March 2023

இதற்குத் தண்டனை கிடையாதா?

 

        நன்றி: வணக்கம் மலேசியா

இறந்த ஒருவரின் உடலை இறக்காத ஒருவரின் குடும்பத்தில்  ஒப்படைத்து  ஆள்-மாறாட்டம் செய்த சிறைச்சாலை துறையினர் மீது  அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது அல்லது எடுக்கப் போகிறது  என்று  பொது மக்கள் கேள்வி எழுப்புவதில் ஏந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியக் குடும்பங்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா என்று இயல்பாகவே நமக்குத்  தோன்றுகிறது. இது ஒர் எதிர்பாராத சம்பவம் என்று சொன்னாலும் அந்த எதிர்பாராத சம்பவம்  ஏன் இந்திய குடும்பங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடைபெறுகிறது என்பதைத்தான் நாம் கேட்கிறோம்.

தவறுகள் நடப்பது இயல்புதான். ஒரு சில இடங்களில் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இது போன்ற இடாங்களில் விதிவிலக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போது ஒன்று மட்டும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சிறைத்துறை சரியான வழியில் செல்லவில்லை  என்பதுதான்.  சிறையில்  இறப்பு நடந்தால் அது இந்தியராக இருக்கிறார். இது போன்ற ஆள்-மாறாட்டம் நடந்தாலும் அதுவும் ஒர் இந்தியராக இருக்கிறார். அது ஏன் இந்தியர்களுக்கு மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது? மற்ற இனத்தவர்களைப்பற்றி நாம் கேள்விப்ப்டுவதில்லையே?

சரி, இப்போது இந்தப் பிரச்சனையைப் பற்றியே பேசுவோம்.  இறந்து போன அந்த  இளைஞனை   இன்னொரு  வீட்டார் அவனைக் கொண்டு போய் மின்னியல் சாதனத்தில் தகனம் செய்திருந்தால்  அல்லது சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்தால் கூட  சிறைத்துறை என்ன பதிலைச் சொல்லும்? அதை எப்படி ஒரு சாதாரண விஷயமாக நாம்  எடுத்துக்கொள்ள முடியும்?  எல்லா மதத்தினருக்கும் இறந்த பிறகு செய்கின்ற சடங்குகள் மிக முக்கியமானவை.  இந்து  மதம் கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் என்றெல்லாம் வேறுபாடுகள் இல்லை. எல்லாம் சடங்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் தாம். அப்படி நடந்திருந்தால் இவர்கள் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்.

இது போன்ற தவறுகள் நடந்திருக்கக் கூடாது ஆனால் நடந்துவிட்டது.  நடந்துவிட்டதற்கு இப்போது சிறைத்தரப்பிலிருந்து அல்லது காவல்துறையிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருப்போம்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்கான தண்டனை என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment