Thursday 2 March 2023

ஏன் இந்த இழிநிலை?

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் பற்றி பேசும் போது அவர் எல்லாகாலங்களிலும் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுபவர்!

பதவிக்காக எதனையும் செய்பவர்  என்பது தான் அவரைப்பற்றிய நமது பொதுவான அபிப்பிராயம். எப்போதும் இனங்களுக்கிடையே   பகைமையை உருவாக்குபவர். இனத்துவேஷத்தை  வளர்ப்பவர். அதன் மூலம் தனது பதவியைத் தற்காத்துக் கொண்டவர்.

தன்னை மலாய்க்காரர் என்று சொல்லி சொல்லியே தன்னை வளர்த்துக் கொண்டவர். அவர் ஓர் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் என்பது தான் அவரின் உண்மைச் சரித்திரம்.  சிங்கப்பூர் பலகலைக்கழகத்தில் அவர் மருத்துவம் பயிலும் போது தன்னை இந்தியர் என்றே அடையாளப்படுத்தியிருக்கிறார்.  அவரது அடையாளக்கார்டும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் அந்த சரித்திரத்தை,  அவரின் பதவியைப் பயன்படுத்தி,  பின்னர் மாற்றிக் கொண்டவர். அவரிடம் உண்மை இல்லை. நேர்மை இல்லை என்பதை உறுதிப்படுத்த இது ஒன்றே போதும்!

அவர் தான் இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்தவர். ஆனால் மலாய்க்காரர்கள் முன்னேறவில்லை என்கிறார்.  இன்னும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையவில்லை என்கிறார். ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்?   பொருளாதாரம் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். ஆனால் அவர் உழைக்கச் சொல்லவில்லை. இலஞ்சம்  வாங்கினால் முன்னேறலாம் என்கிற வழியைக் காட்டிக்கொடுத்தவர் அவர் தான்.  அவரும் அதனை நிருபித்துக் காட்டினார்.  அவர் குடும்பமும் அதைத்தான் செய்தது!

இந்தியர்களின் மீது தீராப்பகைக் கொண்டிருந்தார். அந்நாள் இந்தியத் தலைவரை வைத்தே இந்தியர்களின் பொருளாதாரத்தை நொறுக்கினார்! இந்நாள்வரை இந்தியர்களின்  முன்னேற்றம் சொல்லும்படியாக இல்லை.

அவரின் அந்திமகாலம் எப்படியிருக்கிறது? நொந்து நூலாகியிருக்கிறார். பல ஆண்டுகாலம் கட்டிக்காத்த அவரது தொகுதியிலேயே, கடந்த தேர்தலில் வைப்புத்தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது! அவரது கட்சியினர் அனைவருமே தேர்தலில்   வைப்புத்தொகையை இழந்திருக்கின்றனர். 

தான் தொடங்கிய கட்சியையே வேண்டாமென்று  'தவளை' என்று அழைக்கப்படும் இப்ராகிம் அலி தலைமையில் இயங்கும் கட்சியான புத்ரா கட்சியில் அவர்  இப்போது இணைந்திருப்பது தான் ஆகக்கடைசியான அவரது அரசியல் நிலைப்பாடு!  கட்சியில் இணைந்தவுடனேயே தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்! மலாய்க்காரர்கள் முன்னேறவில்லை! பொருளாதாரத்தை வந்தேறிகள் கைப்பற்றிக் கொண்டனர் என்பதாக தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார்!

இவரது கூற்றுப்படி மலாய்க்கரர் பொருளாதார முன்னேற்றம் என்றால் இலஞ்சம் என்கிற சொல் தான்  நம் முன் நிற்கிறது!  இலஞ்சம் வாங்கியாவது நீங்கள் முன்னேறுங்கள் என்பது தான் அவரது ஆசை. ஆனால் அது அதிககாலம் நீடிக்காது என்று யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை.

கடைசி காலம் அவருக்கு மிக அவலமான ஒரு நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது. அவரே தான் அவரைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சரிவுகள் தான் ஏற்படும்!

No comments:

Post a Comment