பல்கலைக்கழகங்களில் அரசியல் கிளைகளா? வேண்டவே வேண்டாம்!
மாணவர்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும் என்பது வேறு. அதற்காக அங்குக் கிளைகளை அமைத்துத்தான் அந்தத் தெளிவைப்பெற வேண்டும் என்பது வேறு. தினசரி நாளிதழ்களைப் படித்தாலே அரசியல் அறிவைப் பெறலாம். நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
கிளைகள் அமைப்பதின் மூலம் நல்ல காரியங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை. அதுவும் நம்மிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் கட்சிகள் எதுவும் இல்லை. நமது நாடு ஏற்காத சித்தாந்தங்களைப் பேசிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருக்கின்ற கட்சிகள் தான் மாணவர்களிடையே செல்வாக்கைப் பெறுகின்றன. அவர்களில் பலருக்கு உண்மை நிலவரம் தெரிவதில்லை..
சான்றுக்கு ஒரு நாட்டைக் குறிப்பிடலாம். ஆப்கானிஸ்தான் என்கிற ஒரு நாடு. உலகத்தில் இப்படி ஒரு நாடு தேவையா என்பது தான் மக்களிடையே உள்ள ஒரு கருத்து. ஆனால் அந்த நாட்டை ஆகா1 ஓகோ! என்று புகழ்ந்து தள்ளுகிற ஒரு குமபலும் உண்டு. இவர்களுக்கு அந்த நாட்டின் மீது அப்படி என்ன ஈர்ப்பு? அது தான் தெரியவில்லை! பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகக்கூடாது, படிக்கக் கூடாது, மேற்கல்வி பயிலக்கூடாது - இப்படி பெண் பிள்ளைகளை நசுக்குகிற ஒரு நாடு என்றால் அது ஆப்கானிஸ்தான் நாடு தான்! ஆனால் அவர்களையும் ஆதரிக்கிற அந்தக் கும்பல்களுக்கு நமது நாட்டிலும் ஆதரவு உண்டு!
அந்த நாட்டின் சூழல் தெரியாது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாது. பெண்கள் வெளியே நடமாடக்கூடாது என்பது தெரியாது. இப்படியே ஒன்றுமே தெரியாமல் ஏதோ ஒரு காரணத்தை வைத்து ஆதரிப்பவர்களில் மாணவர்களே அதிகம்!
இது போன்ற சூழலில் தீவிரவாத கட்சிகளை உள்ளே கிளைகள் அமைக்க அனுமதிகொடுத்தால் மாணவர்களை அவர்கள் இருக்கிற அறிவையும் இழந்து வன்முறை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவார்கள்! இது தான் நடக்கும். நல்லது நடக்க வழியில்லை!
அறிவை வளர்க்கக்கூடிய கட்சிகளாக இருந்தால் கிளைகள் அமைக்கலாம். ஆனால் நமது நாட்டில் அரசியல் என்றால் தீவிர்வாதம், சமயம், இனங்களுக்கிடையே மோதல் - இவைகளைப்பற்றி பேசினால் அரசியலில் ஆதாயம் பெறலாம் என்று நினைக்கும் கட்சிகள் தான் அதிகம்!
அரசியல் கட்சிகள் பல்கலைக்கழகங்களில் கிளைகள் அமைப்பதை நாம் விரும்பவில்லை. ஒரு வேளை அது பிற்போக்குத்தனம் என்று கூறலாம். நல்லது என்று நினைத்துத்தால் நமக்கு அதில் ஆட்சேபனையில்லை.
ஆனால் நல்லது நடக்குமா என்பது தான் கேள்வி?
No comments:
Post a Comment