கேள்வி
வருகின்ற தமிழகத் தேர்தலில் மக்களின் மன நிலைமை எப்படி இருக்கும்?
பதில்
வழக்கம் போல் தான் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளை விட்டு மக்கள் எங்கும் போய்விடக் கூடாது என்பதில் திராவிடக் கட்சிகள் கவனமாக இருக்கின்றன.
இன்னொரு பக்கம் திராவிடக் கட்சிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று தமிழர் தேசியக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
மக்களோ யார் இலஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் வாக்கு என்று வழக்கம் போல தேர்தலை மிக எளிதாக எடுத்துக் கொள்ளுகின்றனர்! இலஞ்சம் என்றால் ஆயிரம், ஐயாயிரம் இல்லை! பத்தாயிரம் வரை பேரம் பேசப்படுகிறது என்கிறார்கள்! ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால்? எண்ணிப் பாருங்கள். வெறும் நூறு நூறு ரூபாய் நோட்டுக்களையே பார்ப்பாவர்களுக்கு .....நிலைமை என்ன?
பெரும்பான்மையான தமிழ் மக்களை திராவிடக் கட்சிகள் அவர்களது ஆட்சியில் தொடர்ந்து வறுமையில் வைத்திருக்கின்றனர். குடிகாரர்களாய் வைத்திருக்கின்றனர். இது தான் திராவிடக் கட்சிகளின் திறமை. இப்படி இருந்தால் தான் தமிழர்கள் தொடர்ந்து தங்களை ஆதரிப்பார்கள் என்கிற உள் நோக்கம் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றது!
இலஞ்சத்தை வைத்தே இது நாள் வரை ஆட்சியிலிருந்தவர்கள் திராவிடக் கட்சியினர்! இலஞ்சம் அவர்களுக்குத் தொடர்ந்து கை கொடுக்கும் என்று இன்னும் நம்புகின்றனர். பழைய தலைமுறை "உதய சூரியன், இரட்டை இலை" என்று பழக்கப்படுத்திக் கொண்டனர்! புதிய தலைமுறை தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அத்தோடு தமிழகத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட பல போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏதேனும் மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மக்கள் மன நிலையில் கொஞ்சமாவது மாற்றம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.
இனி திராவிடக் கட்சிகள் நூறு விழுக்காடு ஆட்சியினை கொண்டு வர இயலாது! இங்கும் இனி கூட்டாட்சி என்கிற நிலை தான் ஏற்படும்!
No comments:
Post a Comment