கேமரன் மலையில் நடைபெறுவது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆணவம், திமிர். அதிகார வன்முறை.
அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று நாடே விரும்பிய போது கேமரன் மலை மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனாலும் அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்த பகாங் மாநிலம் இன்னும் முந்தைய ஆட்சியான பாரிசான் ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேமரன்மலையில் இப்போது விவாசயத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இந்தியர்கள். இந்த இடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இங்கு விவசாயம் செய்பவர்கள் இந்தியர்கள் என்பதால் தான் இன்று அவர்கள் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பக்காத்தானுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்கிற ஒரே காரணம் தான். ஏன், இதற்கு முன் ம.இ.கா. கிளைகள் அமைத்து அரசாங்கத்தை ஆதரித்தார்களே அப்போதாவது அந்த விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவி சாய்த்தார்களா? அப்போதும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்ச்யின் பக்கம் சாய வேண்டிய சூழநிலை.
இந்த இந்திய விவசாயிகள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது அப்படி என்ன ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சனையா? இது முற்றிலுமாக இந்தியர்களுக்கு எதிரான வன்முறை என்பது தான் உண்மை. ஏன் இதனை மலாய்க்காரர்கள் செய்யவில்லையா? ஒரு காலத்தில் அம்னோவை பலமாக ஆதரித்த கிராமத்து மலாய்க்காரர்கள் பின்னர் ஏன் பாஸ் கட்சியின் பக்கம் தாவினார்கள்? காரணம் அம்னோ ஊழலில் திளைத்த ஒரு கட்சி என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்போது மலய்க்காரர்களை ஆளுங்கட்சியால் என்ன செய்ய முடிந்தது?
ஏன் இப்போது இந்தியர்களுக்குச் இந்த நீதி நேர்மையற்ற செயலையைச் செய்ய வேண்டும்? அறுபது ஆண்டு காலம் பதவியை அலங்கரித்த ம.இ.கா. அன்றே அதன் கடமையைச் செவ்வனே செய்திருந்தால் இன்று அந்த விவசாயிகள் வீதிக்க வர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் என்ன செய்ய? அவர்கள் செய்யவில்லை! தகுதி இல்லாதவர்கள் பதவிக்கு வந்ததின் விளைவு அது!
இப்போது இன்றைய நடப்பில் இருக்கும் அரசாங்கம் என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை. அதிகாரம் இவர்கள் கையில் இல்லை என்பது நமக்கும் தெரியும். ஆட்சி பாரிசான் கையில். அவர்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்!
என்ன செய்ய? இது அதிகார வன்முறை!
No comments:
Post a Comment