Monday 8 April 2019

இது தான் ம.இ.கா.வின் இன்றைய நிலை!

சும்மா  வெறுமனே சொல்லவில்லை!  அறிந்து புரிந்து தான் சொல்லுகிறோம்! இது தான் ம.இ.கா.வின் இன்றைய நிலை!

ரந்தாவ் இடைத் தேர்தலில் என்ன நடந்தது என்பதைப்  பெரும்பாலானோர் இந்நேரம் அறிந்திருப்பர்.  

ஆமாம், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை ம.இ.கா.வினர் என்ன செய்தார்கள் என்பதை பத்திரிக்கைகள்  வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.  அந்த  நபரின் - அவர் அணிந்திருந்த பக்காத்தான்  டீசட் டையை - கழற்ற வைத்து  பாரிசான் டீசட்டையை வலுக்கட்டாயமாக அணிய வைத்திருக்கின்றனர். 

பார்ப்பதற்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் ம.இ.கா.வினர் எந்த அளவுக்கு  14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்  என்பது நாம் புரிந்து கொள்ளலாம்!

ஒரு பக்கம் பாஸ் கட்சியினரைக் கைக்கூப்பி  வரவேற்கின்றனர்.   இந்தியர்களைக் கேவலமாகப் பார்ப்பவர்கள் அவர்கள். நமது மதத்தினரை மதிக்கத் தெரியாத ஒரு கூட்டம். அம்னோவுடன் சேர்ந்து கொண்டு இந்தியர்களைச் சிறுமை படுத்தியவர்கள். 

இவர்களெல்லாம் இவர்களுக்கு நண்பர்களாகிவிட்டனர்! அது தான் வேதனை! இந்த மனநிலையில் உள்ளவர்கள்  எப்படி நடந்து கொள்ளுவார்கள்?   நீங்கள் நினைப்பது சரி தான்! அது தான் நடந்தது!

அந்த மனநிலை பாதிக்கப்பட்ட நண்பர் போட்டிருந்தது பக்காத்தான் கட்சியின் டீசட்டை. அதனை ஏன் இவர்கள்  மாற்றினார்கள்?  இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? 

"பக்கத்தான் கட்சியினர் மனநிலை பாதிக்கப்படவில்லை, நண்பா! நாங்கள் )ம.இ.கா.வினர்) தான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறோம்.!  மனம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களிக்கட்டும்! மனநிலை பாதிக்கப்பட்ட எங்களுக்கு (பாரிசானுக்கு) வாக்களிக்க வேண்டாம்  அதனால் அவர்களின் டீசட்டையைக் கழற்றிவிட்டு எங்களுடைய டீசட்டையைப் போட்டுக்கொள்!  அது தான் சரியாக இருக்கும்!"  என்று ம.இ.கா.வினர் சொல்ல வருகிறார்களா?

அப்படித்தான் இருக்க வேண்டும்!  மேல்மட்டத் தலைவர்களும் கீழ்மட்டத் தலைவர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள்! 

காரணம், அவர்கள் மனநிலை அப்படி!  இன்று ம.இ.கா.வை வழி நடுத்துபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாடு அறியும். இவர்கள் இந்தியர்களை  வழி நடுத்தும்  தகுதியை  எப்போதோ இழந்து விட்டனர். இவர்களின் முன்னாள் தலைவர் எப்படி செயல்பட்டாரோ அதனையே தான் இவர்களும் பின் பற்றினார்கள்!  அது ஒன்றே போதும்!  சிந்திக்கத் தகுதியற்றவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை இவர்களைப் பார்த்தாலே போதும்! வேறு சான்றுகள் வேண்டாம்!

ம.இ.கா.வினருக்கு நன்றி சொல்வோம்!  மன நில பாதிக்கப்பட்ட அவர்களை மேலும் மேலும் புண் படுத்த வேண்டாம்!

No comments:

Post a Comment