பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கூறிய கருத்து சரியானதே. வரவேற்கிறோம்!
பிரதமர் துறையின் கீழ் செயலபடும் மித்ரா அமைப்புக்குத் தலைமை வகிப்பவர் பொன்.வேதமூர்த்தி அவரகள். இந்நாட்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் நூறு மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருக்கிறது. இந்தப் பணம் இந்தியர்களிடையே பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
அந்தப் பணம் சரியான முறையில் பகிர்ந்தளிக்கபபடுகிறது என்றாலும் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். என்ன தான் நடக்கிறது என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். இரகசியம் காக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எதுவுமில்லை!
முந்தைய அரசாங்கத்திலும் இந்தியர்களுக்கு என்று பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டன என்று நமக்குத் தெரியும். ஆனால் அதனை அப்படியே ஒரு சிலர் ஒதுக்கிக் கொண்டனர்! தனிப்பட்டவர்களின் பாக்கெட்டுகளுக்குள் அந்த மில்லியன்கள் ஒதுங்கிக் கொண்டன! போனது போனது தான். செத்துப் போனவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை!
மித்ராவில் மானியம் பெற மிகக் குறுகிய அவகாசமே கொடுக்கப்பட்டது என்பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை. வி.சிவகுமார் சொன்னது சரி தான். எத்தனை இந்தியர்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்கிற கேள்வி நியாயமானது தான். உதாரணமாக நான் தினசரி நாளிதழ் வாசிப்பவன். ஆனால் அந்தச் செய்தியைப் படிக்கவில்லை! நான் வாங்கும் பத்திரிக்கையில் அந்தச் செய்தி வரவில்லையோ!
இந்த நேரத்தில் ஓர் ஆலோசனை. சும்மா செய்தியாகப் போடுவதை விட ஒரு பக்க முழு விளம்பரமாக அந்தச் செய்தியைப் போட்டால் சீக்கிரமாகப் போய்ச் சேரும் அல்லவா. விருப்பு வெறுப்பின்றி எல்லாத் தமிழ் பத்திரிக்கைகளிலும் விளம்பரத்தைப் போடுங்கள். அது தான் மக்களுக்குப் போய்ச் சேர சரியான வழி.
மேலும் இய்க்கங்களுக்குத் தான் பெரிய அளவில் மானியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அரசாங்கத்திலும் அது தான் நடந்தது. இந்த இயக்கங்கள் அப்படி என்ன தான் மக்களுக்குச் சேவைகள் செய்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். காரணம் இந்த இயக்கங்களில் தான் நிறைய பண முதலைகள் இருக்கின்றனர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
தொழில் செய்பவர்களுக்கு மித்ராவின் மூலம் என்ன உதவிகள் கிடைக்கின்றன? ஓர் இளைஞன் சொன்னார் "இங்கும் பணம் கொடுத்தால் தான் உதவி கிடைக்குமாம்" என்று! இருந்தாலும் இலஞ்சம் கொடுக்க அவர் தயாராக இல்ல!
வி.சிவகுமார் சொல்லுவதை நான் ஆதரிக்கிறேன். மித்ரா தனது கணக்கு வழக்கில் வெளிப்படைத் தனமை வேண்டும். மூடி மூடி வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் புதிய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வரவில்லை!
இது பணம் சம்பந்தப்பட்டது. நாங்கள் மிகவும் ஏமாற்றப்பட்ட சமூகம். இனி மேலும் ஏமாறத் தயராக இல்லை!
இது நாங்கள் மித்ராவுக்கு வைக்கும் வேண்டுகோள்!
No comments:
Post a Comment