ரந்தோ இடைத் தேர்தலில் ஒர் எதிர்பாராத கைகலப்பு! அதுவும் பக்காத்தான் கட்சியினருக்கும் ஓர் அரசு சாரா அமைப்புக்கும்!
உண்மையில் அந்தக் கைகலப்பு என்பது ம.இ.கா.வினர் செய்த குறும்புத்தனம். அது அவர்களின் பிறவிக் குணம். இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் நாசமாக போக வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்! " ம.இ.காஎன்பது இந்தியத் தலைவர்களுக்கு மட்டும் தான் இந்திய மக்களுக்கு அல்ல" என்பது தான் அவர்களின் சுலோகம்! அதன் படியே பார்த்தால் எந்த ம.இ.கா. தலைவனாவது வறுமையில் வாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொருவனும் வயிற்றைத் தூக்கிக் கொண்டு தான் திரிகிறான்!
இது ஒரு இடைத் தேர்தல். அங்கே போய் நியாயம் கேட்கிறார்களாம். கல்விக் கொள்கைப் பற்றி பேசக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. கேட்க வேண்டிய இடம் வேறு. ஓர் இடைத் தேர்தலில் கல்விக் கொள்கை மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்படியே அந்தக் கல்விக் கொள்கையை ஸ்ரீராம் ஆதரித்து விட்டால் உடனே அது நடைமுறைக்கு வந்து விடுமா? இன்னும் நீங்கள் எதனை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது - அவர் வெற்றி பெற்றாலும் - அவரால் கொண்டு வர இயலாது.
நீங்கள் கல்வி அமைச்சரைக் கண்டு பேசி இருந்தால் உங்களைப் பாராட்டலாம். அதனைச் செய்வதற்கு உங்களால் முடியவில்லை.
கல்விக் கொள்கை என்பது முடிந்து விட்ட ஒரு பிரச்சனை அல்ல. அது இன்னும் தொடருகிறது. இன்னும் அது பற்றிய கூட்டங்கள், பேச்சு வார்த்தைகள், ஆலோசனைகள் - இதனை எல்லாம் ஆசிரியர் மன்றங்கள், பொது இயக்கங்கள் அனைத்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றன.
நீங்கள் ஓர் இடைத் தேர்தலில் இதனைச் சட்டமாக கொண்டு வர முயல்வது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. உங்கள் நடவடிக்கை அரசு சாரா இயக்கம் செய்ததாகத் தெரியவில்லை. இது ம.இ.கா. வினர் செய்த வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது!
இதற்கு முன்னர் நடந்த இடைத் தேர்தல்களில் எங்கே போயிருந்தீர்கள்? அப்பொழுதெல்லாம் உங்களின் கல்விக் கொள்கை சரியாக இருந்ததா?
இது ஒரு கடுமையானத் தேர்தல் என்பது உண்மை தான். இந்தியர்களின் வாக்குகளைப் பிரிப்பது தான் உங்கள் வேலை என்பதும் எல்லாருக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
ஏதோ காசை வாங்கிக் கொண்டு உங்கள் வேலையைச் செய்து விட்டீர்கள். உங்கள் பணியை தமிழனுக்கு எதிராகவே செய்யுங்கள். இன்னும் சிறப்பாக வாழுங்கள்!
No comments:
Post a Comment