Saturday 13 April 2019

கேள்வி - பதில் (98)

கேள்வி 

வருகின்ற பொதுத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக யார் அமர்வார்?

பதில்

யாராவது இருந்து விட்டுப் போகட்டும்.  ஆனால் காங்கிரஸ் ஆட்சியோ, பா.ஜ.க. ஆட்சியோ வரமால் இருக்க வேண்டும். அதுவும் பா.ஜ.க. வரவே கூடாது என்பதே பலரின் பிரார்த்தனை. 

"பா.ஜ.க. கட்சி என்பது ஒரே கட்சியே அல்ல.  அது ஒரு குண்டர் கும்பல்.  நாட்டின் அமையின்மையைக் கெடுக்க வந்த காவிகட்டிய ஒரு குண்டர் கூட்டம்.  படிக்காத அரைகுறை அறிவுள்ளவர்களின் கட்சி" என்பதாக ஒரு முன்னள் நீதிபதி ஒருவர் அந்தக் கட்சியைப் பற்றி கூறியிருக்கிறார்!

"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது!"  என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்துள்ள வரிகள். 

இப்போதுள்ள பா.ஜ.க.வின் மோடி  அரசாங்கம் விளம்பரத்தாலே  தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பது  தான் உண்மை.  அனைத்தும் விளம்பரம் தான்.  ஏன் அவர் முதல்வராக இருந்த தனது சொந்த மாநிலமான குஜராத்தில்  கூட எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதாகத்தான் செய்திகள் கூறுகின்றன! சொந்த மாநிலத்தின் மீதே அக்கறை இல்லாதவர் இந்தியாவின் மீது என்ன அக்கறை இருக்கப் போகிறது. அவர் தலைமையில் இந்தியா எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் பாக்கிஸ்தான் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் கூட தேர்தல் நாடகம் என்று தான் சொல்லப்படுகிறது! 

இவர் பிரதமராக வருவது என்பது தமிழ் நாட்டுக்கு இன்னும் கெடுதல். இவர் தமிழ் நாட்டை  பாலைவனமாக மாற்றும் திட்டத்தோடு தான் ஊர்வலம் வருகிறார். 

அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்தாலும் அவர்களாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள்  தான். அப்போதும்  தமிழகத்தின்  நலனுக்கு எதிராகவே செயல்பட்டவர்கள். 

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, வெளி நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை  இரண்டு கட்சிகளும்  பதவிக்கு வரக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. புதிதாக வேறு கட்சி ஏதனும் பதவிக்கு வர வேண்டும். 

பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment