நமது தமிழ்ப்பள்ளிகள் பல சாதனைகள் புரிகின்றன.
அதுவும் நாடளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர். அனைத்தும் அறிவியல் போட்டிகள். அறிவியலில் பங்கு பெற்று தங்கப் பதக்கங்களை வெல்வது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உலக நாடுகளில் உள்ள பல பள்ளிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. அவைகளோடு போட்டிப் போட்டு பதக்கங்களை வெல்வது என்பது மிகவும் போற்றத்தக்கது.
இந்த நேரத்தில் பல்ளி ஆசிரியர்களையும் நாம் நினவு கூறுகிறோம். அவர்கள் தங்களின் கடின உழைப்பைக் கொடுக்கின்றனர். மாணவர்களுக்குத் தூண்டுகோளாக இருக்கின்றனார். த்மிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். இந்த மாணவர்களில் பலர் நாளை மருத்துவர்களாக வரலாம் விஞ்ஞானிகளாக வரலாம். அல்லது இன்னும் பல கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். எதுவும் நடக்கலாம்!
இந்த நேரத்தில் நாம் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ஏன் இந்திய இயக்கங்களாகவே இருக்கின்றன? அப்படி என்றால் கல்வி அமைச்சு, இந்த மாணவர்களை, நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்த மணவர்களை, உதாசீனப் படுத்துகிறதா என்னும் கேளவி எழுவதை மறுப்பதற்கில்லை.
நமக்குத் தெரிந்தவரை இந்திய இயக்கங்கள் தான் இந்த மாணவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுக்கின்றன. பாரிசான் கட்சி ஆட்சியிலும் இது தான் நடந்தது. இப்போது பக்காத்தான் கட்சியின் ஆட்சியிலும் அது தான் நடக்கிறது.
சமீபத்தில் நடந்த - மாணவர்களைக் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றில் - மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நீர்வளம், நிலம் மற்றும் இயற்கைவளத் துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த மாணவர்களைக் கல்வி அமைச்சு ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது தான் எனது வருத்தம். இங்குத் தலைமை தாங்க வேண்டியவர் கல்வி அமைச்சர் அல்லது துணைக் கல்வி அமைச்சர். துணைக் கல்வி அமைச்சார் ஏன்றால் அது தான் இந்த மாணவர்களுக்குச் சரியான அங்கீகாரம். கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமையை ஏற்றுக் கொண்டது என்பது பொருள். அதைத்தான் நான் விரும்புகிறேன்.
துணைக் கல்வி அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத வரை கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்!
அது வரை நாம் தான் ஊர் கூடி கும்மியடித்துக் கொண்டு இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment