இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன் கல்வி நுழைவு நமது தமிழ்- இந்திய மாணவர்களுக்கு வெற்றியா, தோல்வியா?
இதனைப் பற்றி நாம் இன்னும் எழுதியும் பேசியும் வருவதால், இன்னும் நாம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடாததால் நாமும் இன்னும் தொடர வேண்டியிருக்கிறது. தொடரத்தான் வேண்டும். காரணம் பட்ட அடி பெரிதல்லவா! இத்தனை ஆண்டுகள் கிடைத்த அநீதிக்கு இன்றைய பக்காத்தான் ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து முந்தைய அரசாங்க கொள்கைகளைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்றால் அது என்ன சரியான அடியா? மரண அடி அல்லவா!
சரி, இந்த ஆண்டு நமது மாணவர்களுக்குப் பிச்சையாக போடப்பட்ட 2200 இடங்கள் என்பது நமக்கு வெற்றியா, தோல்வியா?
2200 இடங்கள் என்பதே பாரிசான் கட்சியினர் போட்ட பிச்சை. அவ்வளவு தான்! இது ஒன்றே போதும் இவர்களும், இந்தியர்களைப் பொறுத்தவரை, பாரிசானத் தான் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுவார்கள் என்பது!
ஆமாம், இது வெற்றியா, தோல்வியா? என்னைக் கேட்டால் இது தோல்வி என்று தான் சொல்லுவேன்.
முதலில் 2200 என்பதே தோல்வி தான்! அதைத் தானே பாரிசான் கட்சியினர் கொடுத்து வந்தார்கள்? கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக அந்த எண்ணிக்கையைக் கூட்டியும் வந்தார்கள். ஒரு வேளை அவர்கள் இந்த ஆண்டு பதவியில் இருந்திருந்தால் இன்னொரு ஐனூறைக் கூட்டி இருக்கலாம். சாத்தியம் தானெ!
பக்காத்தான் ஆட்சி அதனைக் கூட்டவில்லை. அமைச்சரவையில் பேசும் போது கூட நமது இந்திய அமைச்சர்கள் கேட்கத் துணியவில்லை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. அதே பழைய பாணி நஜிப் அமைச்சரவை எப்படி இருந்ததோ அதே பாணி பக்காத்தான் அமைச்சரவை! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் எப்படி அமைச்சரவையில் இந்தியர்களைப் பற்றை சாமிவேலு ஒன்றும் பேசவில்லை என்றாரோ அவர் மீண்டும் இப்போதைய இந்திய அமைச்சர்களைப் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்!
முன்னாள் அரசாங்கத்தில் எப்படி மேல்முறையீடு, மகஜருக்குமேல் மகஜர், ஆர்ப்பாட்டங்கள், கல்வி அமைச்சரிடம் காவடி, கல்வி அமைச்சு முற்றுகை என்றெல்லாம் செய்தோமோ அவை அனைத்தும் இப்போதும் அரங்கேறின!
அப்படிஎன்றால் இது வெற்றியா, தோல்வியா? தோல்வி தான்! நாம் மேல்முறையீடு செய்துங் கூட நமக்கு பக்காத்தான் அரசாங்கம் எதனையும் கூட்டிக் கொடுத்து விடவில்லை. முந்தைய அரசாங்கம் என்ன கொடுத்ததோ, அதாவது நஜிப் என்ன கொடுத்தாரோ, அதையே தான் இன்றைய நமது அரசாங்கம் செய்திருக்கிறது! ஆக, நாம் மீண்டும் பாரிசான் ஆட்சிக்குத் தான் பின்னால் இழுத்துக் கொண்டு போகப் படுகிறோம்!
கல்விக் கொள்கையில் இவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்!
இது தோல்வி தான்!
No comments:
Post a Comment