Saturday 13 April 2019

பாரிசான் வெற்றி..!

நடந்து முடிந்த ரந்தொ இடைத் தெர்தலில் பாரிசான் கட்சி வேட்பாளர் முகமது ஹாசான் வெற்றி பெற்றார்! 

முகமது ஹாசான் சுமார் 4500 வாக்கு வித்தியாசத்தில் தனது  சட்டமன்றத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.  ஹாசானின் வெற்றி எதிர்ப்பார்த்த வெற்றி தான். 

ஹாசான்  ரந்தோ வட்டாரத்தின் மண்ணின் மைந்தர். மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்தவர்.  அவரைத் தோற்படிப்பது என்பது அதுவும் அவரது மண்ணில் சாதாரண விஷயமல்ல. ஆனால் இதுவே பதினான்காவது பொதுத் தேர்தலாக இருந்திருந்தால் டாக்டர் ஸ்ரீராம் வெற்றி பெற்றிருப்பார்!  காரணம் அப்போதைய மக்களின் மனநிலை என்பது வேறு. அப்போது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். அதுவும் மக்கள் ஓர் உக்கிரமான மன நிலையில் இருந்தனர்.  மாற்றம் நடந்தே ஆக வேண்டும் என்னும் தீவிரம் காணப்பட்டது. 

ஆனால் இந்தத் இடைத் தேர்தலில் மக்களின் மனநிலை அப்போது இருந்தது போல் இல்லை என்பது தான் உண்மை.  

காரணம் முந்தைய அரசாங்கத்தில் என்ன நடந்ததோ அது தான் இப்போதும் தொடர்கிறது  என்பது தான் இன்றைய மக்களின் மனநிலை.  மக்கள் பல காரியங்களை அறியவில்லை. முன்னாள் பிரதமர் நஜிப் செய்த பல தவறுகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்குப் போய்விட்டது என்பதை மக்கள் அறியவில்லை. ஆனால் அது பற்றி மக்கள் கவலைப்படத்  தயாராக இல்லை. மக்கள்  எதிர்ப்பார்ப்பதெல்லாம்  விலை வாசிகள் குறைய வெண்டும்.   இது மக்களின் அன்றாடப் பிரச்சனை.  மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் களையப்படும் வரை அவர்கள் அரசாங்கத்தின் மீது திருப்தி அடையமாட்டார்கள்! 

தேர்தலின் போது நூறு நாள்களில் நாங்கள் அதனைச் செய்வோம், இதனைச் செய்வோம் என்று சொல்லிவிட்டு இப்போது செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது  கோபம் வரத் தான் செய்யும். 

ஆனாலும் இதை விட வேறு ஒன்றும் இருக்கிறது. இடைத் தேர்தல் இது என்பதால் அம்னோ தரப்பினர் இனப்பிரச்சனயை  எளிதாக கிளப்பிவிடுகின்றனர்!  

இன்றைய நிலையில் முகமது ஹாசான் அம்னோவின் இடைக்காலத் தலைவர். அவர் நிரந்தரத் தலைவராக வர வாய்ப்புக்கள் உண்டு.  அப்படியே பாரிசான் கட்சி ஆட்சிக்கு வந்தால்  அவர் பிரதமராக வரவும் வாய்ப்பு உண்டு.  ஆனால் பக்காத்தான் அப்படி விட்டுக் கொடுக்கும் அளவுக்குப் போகாதென  நம்பலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களது  சேவையைச் சிறப்பாக செய்ய வேண்டும்.  சேவை மட்டுமே மக்களால் கணக்கில் எடுக்கப்படும். இந்த ஐந்து ஆண்டுகளில் சேவையை வைத்தே அவர்கள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  அத்னை அவர்கள் செய்வார்கள் என நம்பலாம்.

முகமது ஹாசானின் வெற்றியைப் பாராட்டுவோம்!

No comments:

Post a Comment