இப்போது நம்மிடையே ஓரு புதிய வரவு ஸம்ரி வினோத் பின் காளிமுத்து என்னும் பெயரில்!
இவர் யார்? இப்போது நமக்குத் தெரிந்தது ஒன்று மட்டும் தான் இவர் நாடுவிட்டு நாடு பாயும் ஜாகிர் நாயக்கின் சிஷ்ய பிள்ளை என்பது மட்டும் தான். மேலும் இவர் மேல் கற்பழிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது! வழக்கு அவர் மேல் இருந்தாலும் மதம் மாறினால் சட்டமும் மாறிவிடும் என்று நினப்பவர்களில் ஸம்ரி காளிமுத்துவும் ஒருவர் என நம்பலாம்! இவருக்கு முன்னோடி இந்திரா காந்தியின் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா! ஆமாம், சட்டத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே! அதனால் ஸம்ரிக்கும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என நினைக்கிறார்!
நாம் ஏன் ஜாகிர் நாயக்கை எதிர்க்கிறோம்? அவர் எல்லாக் காலங்களிலும் இஸ்லாம் - இந்து பிரச்சனையிலேயே உழன்று கொண்டிருப்பவர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிராக தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்! வன்முறையை வளர்ப்பவர்! அதற்கான ஆதரங்கள் உண்டு. அதனால் தான் இந்தியா அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்குச் சில நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன!
ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்பதாகச் சொல்லப் படுகின்றது. எந்த நாடும் தேடப்படும் ஒருவருக்குக் குடியுரிமை கொடுத்து "சும்மா கம்னு கெட!" என்று சொல்ல நியாயமில்லை. அவருக்கு ஒரு வேலை உண்டு. அதுவும் பல மதத்தினர் வாழும் மலேசியாவில் அவர் செய்கின்ற வேலை அவருக்குப் பிடித்தமான வேலை. அதாவது இந்துக்களை இழிவாகப் பேசுவது!
ஸம்ரி காளிமுத்துவைப் போன்ற புதிய வரவுகளை - குறிப்பாக இந்துக்களை - அவர்களின் மத நம்பிக்கைகளைப் புழுதி வாரி தூற்ற வேண்டும்! அந்த வேலைக்காகத் தான் ஜாகிர் நாயக் காளிமுத்துவுக்கு நல்ல பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்! இப்போது காளிமுத்து கலகலப்பாக களம் இறங்கியிருக்கிறார். அது தான் சமீபத்திய அவரது பேச்சுக்கள் இந்துக்களை இழிவு படுத்துவதாகச் சொல்லி அவர் மேல் போலீஸ் புகார்களும் செய்யப்பட்டிருக்கின்றன!
ஸம்ரி காளிமுத்து இப்படியே தான் பேசிக் கொண்டிருப்பாரா என்பது இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. சமீப காலமாக காவல்துறை நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி வருகிறது. ஆனால் ஸம்ரி பேசுவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பதை காவல்துறை தான் தீர்மானிக்க வேண்டும்.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நல்லது நடக்கும் என நம்புவோம்!
No comments:
Post a Comment