நமது தமிழ் நாளிதழ்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன! யாரைப் பார்த்து? பிரதமர் துறை துணை அமைச்சர் பொன். வேதமூர்த்தியைப் பார்த்துத் தான் கேள்விகள் எழுப்புகின்றன!
நல்லது தான். ஆள் இருக்கிறாரா, இல்லாயா என்றே தெரியவில்லை! அவர் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அமைச்சர் என்று தான் சொல்லப்பட்டது.
அமைச்சரைப் பொறுத்தவரை இந்தியர்களின் பிரச்சனை தான் என்ன என்பது அவருக்கே குழப்பமாக இருக்கிறது என்று தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது!
அவருக்கு என்று குறிப்பிட்ட இலாகா என்றிருந்தால் அவரால் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும். சிறப்பாகச் செயல்பட முடியும். இப்போது அவர் எந்தத் துறையைச் சார்ந்த அமைச்சர் என்பது அவருக்கும் புரியவில்லை! நமக்கும் புரியவில்லை!
மற்ற மூன்று அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துறை என்பது என்ன என்பதில் சிக்கல் இல்லை. அதனால் அவர்கள் சார்ந்த துறைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடிகிறது.
வேதமூர்த்திக்கோ பொதுவாக இந்தியர்களின் பிரச்சனை என்பதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்தியர்களுக்கோ ஏகப்பட்ட பிரச்சனைகள். வேதமூர்த்தியோ இந்து ஆலயங்கள் பற்றியே அதிகமாகப் பேசி வந்தவர். அதனால் அது பற்றியே அவர் அதிகம் அறிந்தவர். அந்தப் பிரச்சனையிலும் அவரால் சரிவர செய்பட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு நாம் அவருக்கு மட்டும் அல்ல மற்ற இந்திய அமைச்சர்களுக்கும் ஏதோ நாம் அறிந்ததை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் வெவ்வேறு கட்சியினராக இருக்கலாம். ஆனால் பக்காத்தான் அரசு என்று சொல்லும் போது நீங்கள் அனைவரும் ஒரு கட்சியினரே. அதாவது இந்தியர்களின் பார்வையில் நீங்கள் அனைவரும் ஒருவரே.
இன்றைய நிலையில் பார்க்கும் போது வேதமூர்த்தி ஏதோ தனியாக செயல்படுவதாகத் தோன்றுகிறது. அது தேவை இல்லாத ஒன்று. இந்து ஆலயங்கள் என்று வரும் போது அவரை விட அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதுவும் பினாங்கில் சிறப்பாகாச் செயலபடுவதாகச் சொல்லப் படுகின்றது. தனிப்பட்டு செயல்படுவதை விட அவர்களின் ஆலோசனகளைக் கேட்டு அறிவதே நன்று. இங்கு யாரும் உயர்ந்தவர் தாழந்தவர் இல்லை. ஒரே அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள். ஒத்த கருத்தோடு செயல்பட்டால் சமுதாயத்திற்கு நல்லது. நீங்கள் ஒத்த கருத்தோடு செயல்படுவதைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.
வேதமூர்த்தி ஏதோ செயல்படாதவர், செயல்பட முடியாதவர் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்! இந்திய சமுதாய பிரச்சனைகளைக் களைவது தான் அவரின் வேலை. அதனைச் செவ்வனவே செய்ய அவர் முயல வேண்டாம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை இந்த சமுதாயம் அறியவேண்டும். உங்களால் இந்த சமுதாயம் பயன் பெற வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்!
No comments:
Post a Comment