Wednesday 21 October 2020

நம்மாலும் முடியும்! (1)

 என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் எதனையும் சமாளிக்கக் கூடிய திறன் நமக்கு உண்டு  என்பதை மறந்து விடாதீர்கள்!

கொரோனா தொற்று என்பது நமக்குப் ப்திதாக இருக்கலாம். தீடீர் வேலை இழப்பு என்பது புதிதாக இருக்கலாம்.  

மற்ற இழப்புக்களாக இருந்தால் சமாளிக்கலாம் ஆனால் வேலை இழப்பு என்றால் எப்படி சமாளிப்பது?  கையில் பணத்திற்கு எங்கே போவது? என்பதெல்லாம் சரியான கேள்விகள் தான். 

ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்.  வேலை இழப்பு என்பது இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.  இதற்கு முன் இப்படி ஒரு நிலை இல்லை. அதனால் இங்கே இல்லை என்றால் அங்கே என்கிற மனோபாவம் நம்மிடையே அதிகம் என்பதும் உண்மை தான்.

வேலை இல்லை என்பதை இப்போது தான் நாம் எதிர்நோக்குகிறோம். இத்தனை ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோமே அதை நாம் மறந்துவிடக் கூடாது.

இத்தனை ஆண்டுகள் நாம் வேலை செய்து சம்பாதித்து,  சேமித்து வைத்த பணத்தை இன்றைய அவசியத்திற்க்காக நாம் செலவு செய்வதில் தப்பில்லை. 

இப்போது மிகவும் ஆபத்தான காலம். பலர் வேலை இழப்பை எதிர்நோக்கின்றனர். பலருக்கு வேலையே இல்லை.  என்ன செய்யலாம்?

ஒன்று,  இந்த நேரத்தில் நமது சேமிப்பு நமக்கு உதவியாக இருக்கும். பலரும் வேலை இழந்த நிலையில் யாரும் நமக்கு உதவப் போவதில்லை. அதனால் நமது பணம் தான் நமக்கு உதவியாக இருக்கும்.

"எனக்குச்  சேமிப்பே இல்லையே! நான் என்ன செய்வது?'  என்று கேட்பவர்களுக்கு  ஒன்றைச் சொல்லலாம்.   சேமிப்பு இல்லை என்பது மற்றவர்களுடைய குற்றம் அல்ல அது உங்களுடைய குற்றம். 

நீங்கள் உடனடியாக ஒரு வேலையைத் தேடி ஆக வேண்டும்.  அது தான் உங்களுடைய தலையாய  உடனடி நிவாரணத்தைக் கொடுக்கும். 

என்ன வேலை கிடைக்கிறதோ, சம்பளம் குறைவோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலில் வேலை தேவை என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். 

எது எப்படிப் போனாலும் "நம்மாலும் முடியும்!" என்பதை மறந்து விடாதீர்கள்!

No comments:

Post a Comment