Sunday 25 October 2020

மீண்டும் டாக்டர் மகாதிரா?

 மூன்றாவது முறையாக  டாக்டர் மகாதிர் பிரதமராக வர வேண்டும்  என்கிற ஆசை ஒரு சிலருக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது!

முதல் முறை அவர் பிரதமராக இருந்த போது அவரால்  வந்த வினைகள் ஏராளம்! எல்லாவற்றிலும் கை வைத்தார். நாட்டை நாசமாக்கினார்  என்னும்பெயர் அவருக்குண்டு. நல்லது செய்கிறேன் என்று அதிகமாகக் கெடுதல் செய்தவர் அவர்!

கெடுதலுக்கு உதாரணம் இன்றைய அரசியல்வாதிகள். எல்லாம் அவரிடமிருந்து பாடம் கற்றவர்கள்!   நாட்டைக் கொள்ளையடிக்க வகை வகையாக வழிகளைக் கண்டு பிடித்தவர்கள். அவர் தான் இவர்களுக்கெல்லாம் ஆசான்!

இவர் இரண்டாவது முறையாக பிரதமராக வந்தது  ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்.   சென்ற பொதுத் தேர்தலின் போது எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்னவோ  அன்வார் இப்ராகிம் தான். அவர் சிறையில் இருந்ததால் டாக்டர் மகாதிர் முன் நிறுத்தப்பட்டார்.   பாரிசான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற கோபம் மக்களிடையே எல்லை மீறி இருந்தது!  எதிர்கட்சி வெற்றி பெற்றதால் டாக்டர் மகாதிர் பிரதமரானார்.

ஆனால் இவர் இரண்டாவது முறை பிரதமரானது இந்த நாட்டிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய சோகம். அவர் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி அவருக்கு இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம்! வயதானவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல என்பதை நிருபித்துவிட்டார்! வயதானால் எப்பேர்ப்பட்ட மனிதனும் திருந்துவான் என்பதை பொய்யாக்கிவிட்டார்! திருந்துவார் என்று நினைத்தால் வன்மத்தை அதிகமாக்கிக் கொண்டார்!  கடைசியில் யாருக்கும் பிரயோஜனமில்லாத மனிதராக இன்று ஒதுங்கிக் கிடக்கிறார்!

 நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு இவர் தான் காரணம் என்பதை மலேசியர்கள் அறிவர். எந்தவொரு காலத்திலும் இப்படி ஒரு நெருக்கடியை இந்த நாடு சந்தித்ததில்லை. 

எதிர்கட்சி அரசாங்கம் அமைந்த பிறகு ஒப்பந்தப்படி அவர் அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை.  காலத்தைக் கடத்தினார்.  கடைசியில் "உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! உனக்கும் பேப்பே! உங்கப்பனுக்கும் பேப்பே!"   என்கிற நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்!

இப்போது நாட்டில் என்னன்னவோ, எப்பப்படியோ  அனைத்தும் திசை மாறிவிட்டன! நாட்டில் நிரந்தர ஆட்சீயில்லை. இன்றோ என்றோ ஆட்சி கவிழலாம் என்கிற  நிலையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. பேரரசர் தலையிட்டால் ஒழிய தீர்வு இல்லை என்பதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் இவர் மூன்றாவது முறையாக பிரதமரா? கேட்கவே சகிக்கவில்லை!

முதலில் இப்போதுள்ள நிலையை சரிசெய்வோம்.  இதற்கு ஒரு முடிவு காண்பது மிக மிக முக்கியம்,

மீண்டுமா டாக்டர் மகாதிர்?  ஐயோ! வேண்டவே வேண்டாம்!  வேண்டாத ...........  விலை கொடுத்து வாங்குவானேன்!

No comments:

Post a Comment