Sunday 18 October 2020

மேலும் மேலும் குழப்பமா?

 என்னடா1  நமது நாட்டுக்கு வந்த சோதனை!

ஒரு பக்கம் நமது பிரதமர் முகைதீன் யாசின் மக்களைக் குழப்பிக் கொண்டிக்கிறார்!

இன்னொரு பக்கம் அன்வார் இப்ராகிம் "நானே அடுத்த பிரதமர்! எல்லாம் விலகி நில்லுங்கள்!"  என்கிறார்!

இப்போது இன்னொருவர் களத்தில் இறங்குகிறார்.  அவர் தான் கிளந்தான் இளவரசரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா!

ஏதோ ஒரு சக்தி அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆகிவிடக் கூடாது என்று நிரந்தரமாக தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது!

ஆனாலும் துங்கு ரசாலிக்கான ஆதரவு மிகவும் தூக்கலாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவரும் பல தோல்விகளைச் சந்தித்தவர். அவரைப் பற்றியான தவறான அபிப்பிராயம்  என்பதெல்லாம்  ஒன்றுமில்லை. நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். 

 ஆனால் அரசியலில் பெரிய அளவில் அவரால் பெயர் போட முடியவில்லை. அவர் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். 

இப்போது தான் அவருக்கு விடிவு காலம் வந்திருக்கிறதோ என்னவோ! அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் அவருடைய அம்னோ கட்சியினரே அவருக்குப் பக்கபலமாக இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது!

மேலும் அவரின் நோக்கம் வேறாக இருக்கலாம்.  அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவதை அவர் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது அதனால் அன்வார் பிரதமராக வரக் கூடாது என்பதால் இப்போது இவர் பிரதமராக வர முயற்சி செய்கிறார் என்பது தான் உண்மை.

துங்கு ரசாலி பிரதமராக வருவதற்கு அம்னோ ஒரு வேளை ஆதரவு கொடுக்கலாம்.  அம்னோவின் நோக்கம் எல்லாம் "அடுத்த தேர்தல்" மட்டும்தான்!  துங்கு ரசாலி பிரதமராக வந்த பின்னர் அவருக்குப் போதுமான ஆதரவு இல்லாமல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அடுத்து தேர்தல் என்பது தான் சரியான தீர்வாக இருக்கும்,  அப்போது பேரரசரின் முடிவும் அடுத்த தேர்தலாகத் தான் இருக்கும். வேறு வழி இல்லை!

துங்கு ரசாலி அடுத்த பிரதமராக  வருவார் என்றால் அடுத்த திடீர் தேர்தலும் நடக்க வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும்!

துங்கு ரசாலி என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு! அன்வார் இப்ராகிம் என்பது நிரந்திர ஏற்பாடு!

இந்த குழப்பங்கள் இன்னும் எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது அந்த குழப்பத்தின் தன்மையைப் பொறுத்தது!

No comments:

Post a Comment