Monday 5 October 2020

இது என்ன முட்டாள் தனம்?

 கொரோனா தொற்று நோய் சமபந்தப்பட்ட  தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்திற்கு பக்காத்தான் ஆளும் மாநிலங்கள் அழைக்கப்படவில்லை என்பது செய்தி!

உண்மையில் இது நமக்கு வியப்பைத் தருகிறது.  தங்களுக்கு எதிரான கட்சிகள் மாநிலங்களில்  ஆட்சி செய்கின்றன என்பதற்காக அந்த மாநிலங்களைப் புறக்கணிப்பது ஒரு சரியான அணுகுமுறை அல்ல என்பது தான் நமது நிலை.

பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் போன்ற மாநிலங்கள் அழைக்கப்படவில்லை. இன்றைய நிலையில் அவை எதிர்கட்சிகளின் மாநிலங்கள். 

அரசியல் ரீதியில் அவை எதிர்கட்சி மாநிலங்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். 

இப்போது தொற்று நோய் அனைத்து மாநிலங்களிலும் கொடிகட்டிப் பறக்கிறது.  தொற்று நோய்க்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பேதங்கள் இல்லை. பேதம் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் தொற்றுக்கு இல்லை.  

இது போன்ற சிறிய விஷயத்தைக் கூட தெரியாத அரசியல்வாதிகள் நம்மை ஆளுவதற்கு நாம் இன்னும் அவர்களை விட்டு வைத்திருக்கிறோம்!

இந்த அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக நினைக்கின்றனர் என்பதைத் தவிர வேறு என்ன நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.  நோய் என்பது ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றா பார்த்துக் கொண்டிருக்கிறது?  அது எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லா வகையிலும் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது!

ஐயோ பாவமே!  அரசியல் என்றால் என்ன,  நோய் என்றால் என்ன என்பது கூட அறியாத அசிங்கங்கள் எல்லாம் நாட்டை ஆளுவது மக்களுக்கு எத்துணைப் பெரிய அழிவை உண்டாக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களால் மக்களுக்கு என்ன நல்லது நடந்து விடப் போகிறது?

இறைவா! நாட்டை  ஆளுபவர்களுக்கு  சராசரி அறிவு கூட இல்லை என்றால் நாம் என்ன செய்ய?  மக்களின் நலனைப் பற்றி அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் ஏன் இன்னும்  இருக்க வேண்டும்?  கொரோனா இவர்களை எப்போது கொண்டு போகும்!

இது முட்டாள்களின் முட்டாள் தனம்! அவ்வளவு தான்!

No comments:

Post a Comment