ஆமாம், என்னவாயிற்று? என்று தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!
அரசாங்கம் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி செய்து வருகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அது அந்த காலமோ அல்லது இந்த காலமோ உதவிகள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் கிடைக்கின்ற உதவிகள் முழுமையாகப் பள்ளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை!
அரசாங்கத்திலிருந்து பள்ளிகளுக்குக் கிடைக்கப் பெற்ற பணத்தைக் கிடைக்க முடியாத வகையில் இடைத் தரகர்களான ம.இ.கா. தலைவர்கள் சூரையாடினர் என்பது வரலாறு!
எப்படியோ அது ஒரு சோகக் கதை. பிரச்சனை, அது இன்னும் தொடர்கிறது என்பது தான் இன்னும் சோகம். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ......?
இப்போதும் தலைவர்கள் அந்த வரலாற்றை விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்களே என்பது தான் நமக்குள்ள ஆதங்கம்/ இங்கு தலைவர்கள் என்று சொல்லும் போது அவர்களோடு கூட ஒரு சில தலைமை ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் சில்லறைகள் - இப்படி ஒரு கூட்டு முயற்சி! பணம் கொள்ளையடிப்பதில் மட்டும் இந்த கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படுகிறது என்பது தான் வியப்பாக இருக்கிறது! என்ன செய்வது? அவனவன் தங்களது பிள்ளைகளைச் சட்டம் படிக்க வைத்து தங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுகிறான், மாட்டிக் கொள்ளமல் இருக்க!
இதில் என்ன ஆச்சரியம் என்றால் படிக்காதவனுக்குக் கூட தன் இனத்தின் மீது தன் மொழி மீதும் பற்றுடையவனாக இருக்கிறான். ஆனால் படித்த நாதாரிகளுக்கு எதுவுமே இல்லை! இனப்பற்று இல்லை!மொழிப்பற்று இல்லை! பணப்பற்றைத் தவிர வேறு பற்று எதுவுமில்லை!
ஆனால் இந்த பணப்பற்று, என்ன தான் அள்ளி அள்ளி வைத்து வீட்டில் குவித்தாலும், அவன் வீட்டார் அவனது கடைசி காலத்தில் ஒரு முட்டாளாகத்தான் நடத்துவார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்! தப்பவே முடியாது! தெய்வம் நின்று தானே கொல்லும்?
பாரிசான் ஆட்சி காலத்தில் நடந்த இந்த கொள்ளைகள் பக்காத்தான் ஆட்சியில் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது!
மீண்டும் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் இந்த கொள்ளைகள் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
அப்போது இந்த "என்னவாயிற்று?" என்று கேட்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதை மட்டும் நம்பலாம்!
எத்தனை காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியும்? எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு. அந்த முடிவை பக்காத்தான் ஆட்சியில் நாம் எதிர்பார்க்கலாம்.
ஆமாம்? என்ன ஆயிற்றூ? ஒன்றும் ஆகவில்லை! தற்காலிக விடுமுறை, அவ்வளவு தான்!
No comments:
Post a Comment