Saturday 10 October 2020

ஏன் கட்டவில்லை?

 பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேருங்கள் என்று கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் ஒன்றை மறந்து விட்டோம். 

தேசிய மொழிப்பள்ளிகள், சீனப்பள்ளிகளில் இல்லாத, கேட்காத சில பிரச்சனைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

சான்றாக இன்றைய செய்தியில் பகாவ், நெகிரி செம்பிலானில் ஒரு பள்ளி இணைக்கட்டடத்தைக் கட்டி முடிக்க முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருக்கின்றது!

என்ன செய்வது? ஆட்சி மாறிவிட்டதால் கட்டடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை என்கிறார்கள்!  இதெல்லாம் ஒரு காரணமா? நம்ப முடியவில்லை!

ம.இ.கா. காரன் ஆரம்பித்து வைத்தான்.  அத்தோடு அது சரி! அவனால் முடித்து வைக்க ,முடியவில்லை! அடுத்தவனும் வந்தான் அவனாலும் முடித்து வைக்க முடியவில்லை1 நாம் என்ன சொல்ல?  இரண்டு தவணைகள் பதவியில் இருந்தார்கள் அவர்களால் முடியவில்லை! 

பேரு பெத்த பேரு என்பார்கள்!  மாநிலத்தின் ஆட்சிக்குழு பதவி வேறு!  ஆனாலும் ஒன்றையும் கிழிக்க முடியவில்லை! அதிலும் இவர்கள் எல்லாம் முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்! ஒரு காரியத்தை முன்னெடுத்தால் அதை முடிக்கும் வரை  "பசி நோக்கார், கண் துஞ்சார்,  கருமமே கண்ணாயினார்" என்றல்லாவா  இருக்க வேண்டும்?  இவர்களின் அரசியல் குரு என்னத்தைக் கற்றுக் கொடுத்தார்? இப்போது கொஞ்சம், நாளை கொஞ்சம், இந்த ஆண்டு கொஞ்சம், அடுத்த ஆண்டு கொஞ்சம் இப்படி ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டு போவதற்கா இவர்கள் பதவியில் இருக்கிறார்கள்?

தமிழ்ப்பள்ளிகளில் புதிதாக சேருகின்ற பிள்ளைகளுக்கு என்னத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்? என்ன தெரிந்து கொள்கிறார்கள்? இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டடங்கள், கரையான் அரித்த கட்டடங்கள், கட்டடம் கட்டவில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் - இவைகளையெல்லாம் படிக்கவா நாம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்? 

சே! அரசியலில் இருப்பவனுக்கு இனப்பற்றும் இல்லை, மொழிப்பற்றும் இல்லை! அட! அவன் குடும்பத்தின் மீதாவது அவனுக்குப் பற்று இருக்கிறதா, தெரியவில்லை!

ஒன்று மட்டும் நிச்சயம். வருங்காலங்களில் இவர்கள் எல்லாம் "மெண்டல்" லாகத்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்! அப்போது அவனே "ஏன் கட்டவில்லை?" என்று நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பான்!

No comments:

Post a Comment