ஐ.பி.எப். கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை!
ம.இ.கா. வே துணிந்து போட்டியிடுவோம் என்று சொல்லும் போது ஐ.பி.எப். சொன்னால் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை!
ஆனால் ம.இ.கா.விற்கு அவர்களின் கூட்டணி கட்சிகளிடையே இன்னும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கு உண்டு. அவர்களால் ம.இ.கா.வை உதறித் தள்ளிவிடவும் முடியாது, உதாசீனப்படுத்தவும் முடியாது! காரணம் எல்லாக் கட்சிகளுமே, மக்களின் செல்வாக்கைப் பொறுத்தவரை, ஏறக்குறைய சமநிலையில் தான் இருக்கின்றன!
ஐ.பி.எப். கட்சிக்கு செல்வாக்கு என்று எதுவும் இல்லை. மாநில மந்திரிபெசார்களிடம் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம் என்பதால் அவர் மூலம் காரியம் சாதிக்க நினைக்கின்றனர். ஆனால் மந்திரி பெசார்களுக்கு ம.இ.கா. வினரிடம் அவர்களின் அதிகாரத்தைக் காட்ட முடியாது! அது அவர்களின் கூட்டணிக்கு விரோதமானது.
ஐ.பி.எப். கட்சி எந்த வகையில் வலிமையாய் உள்ளது? ஒரு வகையிலும் இல்லை! ம,இ,கா, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஒழிய அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. ம.இ.கா. மூலம் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கும் என்பதும் சாத்தியமில்லை.
தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அவர்கள் ம.இ.கா.வுடன் இணைய வேண்டும். அதுவும் சாத்தியமில்லை! இங்குத் தலைவனாக இருந்துவிட்டு அங்குத் தொண்டனாகப் போக அது மானப் பிரச்சனையாகி விடும்! தொடர்ந்து இங்குத் தலைவனாக இருந்தால் ஒரு வேளை செனட்டர் ஆகக் கூடிய வாய்ப்புண்டு.
அரசியலில் இருந்தால் "நமக்கு என்ன கிடைக்கும்" என்பது ஒன்று தான் இன்றைய இலக்கு! சேவை? தொண்டு? இதெல்லாம் எனது வயிறு நிறைந்த பிறகு என்பான் இன்றைய அரசியல்வாதி!
நமது சமுதாயத்தினர் எந்த அரசியல்வாதியையும் நம்ப வேண்டாம் என்பது தான் எனது வேண்டுகோள். நம்மைப் பிரதிநிதிப்பதாக சொல்லுபவர்கள் பெரும்பாலும் நம்மை இளிச்சவாயனாகத் தான் பார்க்கிறார்கள்! மறந்து விடாதீர்கள்!
ஐ.பி.எப். நிலை தான் என்ன? இலவு காத்த கிளி கதைதான்!
No comments:
Post a Comment