Thursday 22 October 2020

அன்வாரின் பிடி தளர்கிறதா?

 பிரதமர் ஆகும் அன்வார் இப்ராகிம் கனவு,  கனவாகவே ஆகிவிடுமோ என்கிற கேள்வி எழுந்தள்ளது! 

ஆமாம், அவரின் பிடி தளர்கிறது என்றே தோன்றுகிறது!

அரசியலில் எதுவும் நடக்கலாம்.  அரசியலில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. அது போலவே அன்வார்  இப்ராகிம் நல்லவரா, கெட்டவரா என்பதும் நமக்குத் தெரியாது.

பதவிக்கு வந்த பிறகு தான் ஒருவரின் உண்மைத் தன்மை நமக்குத் தெரிய வரும். அன்வார் விஷயத்தில் அவரைப்பற்றி நம்மால் அதிகம் தெரிந்த கொள்ள முடியவில்லை. எந்த அளவுக்கு அவரால் அனைத்து இனத்தவரையும் அணைத்துச் செல்ல முடியும் என்பது இன்னும் நமக்குப் புரியாத புதிர் தான். அதற்காகவாவது அவர் பிரதமராக வந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் பிரதமர் பதவிக்கு வரமுடியாத அளவுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் சரியான கிடுக்குப்பிடியைப் போட்டு வைத்திருக்கிறார்! அதனால் தான் இன்றுவரை அவரால் பிரதமர் பதவியைத் தொட முடியவில்லை!

சாதாரணமாக அம்னோ கட்சி அன்வாருக்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அந்த ஆதரவை அவ்வளவு சீக்கிரத்தில்  நம்பிவிட முடியாது! அப்படியே அவர்கள் ஆதரவு கொடுத்து அன்வார் பிரதமர் பதவிக்கு வந்தாலும் அவர்களின் அடுத்த நடவடிக்கை எப்படி அன்வாரை கவிழ்ப்பது என்பதாகத்தான் இருக்கும்! நிச்சயமாக அவர்கள் அடுத்த தேர்தல் வரை அன்வாருக்கு ஆதரவு கொடுக்க மாட்டாரகள் என உறுதியாக நமபலாம்! அந்த அளவுக்கு அம்னோ கட்சியினர் நம்பத்தகாதவர்கள்!  அதில் எந்த சந்தேகமுமில்லை!

இது நாள் வரை அம்னோவினரை நம்பித்தான் அன்வார் ஆட்சி அமைக்க தன்னால் முடியும் எனக் கூறி வந்தார். இப்போது அது நடக்காது என்றே செய்திகள் கூறுகின்றன.

அம்னோ,  தொடர்ந்து பிரதமர் முகைதீன் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று, முகைதீனுடனான சந்திப்பிற்குப் பிறகு,  இப்போது கூறி வருகின்றனர்.  ஆமாம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது முகைதீனால் கொடுக்க முடிந்தால் அவர்கள் ஏன் அன்வாரை ஆதரிக்கப் போகிறார்கள்? என்பது சரியான கேள்வி தானே!

 ஒன்று மட்டும் நிச்சயம்.   அம்னோவின் வெற்றி என்பது மக்களின் நஷ்டம்! மீண்டும் கொள்ளைக்காரர்கள் தலை தூக்குவார்கள் என்பதில் உறுதியாக நம்பலாம்!

ஏமாற்றுக்காரர்கள் கையில் நாடு போகும் என்றால் "அது தான் இந்த நாட்டு மக்களின் விதி!"  என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!

No comments:

Post a Comment