Friday 1 October 2021

புலிதனை முறத்தால் அடித்து துரத்தினாளே!

 

நன்றி: ஜூனியர் விகடன்

இந்த செய்தியைப் படித்த போது பழைய பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

"புலியதனை முறத்தினாலே அடித்து சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!" என்கிற 'சொர்க்கவாசல்' திரைப்படப் பாடல். நடிகர் கே.ஆர்.ராமசாமி பாடிய இந்தப்பாடல் உடுமலை நாராயணகவி  அவர்களால் எழுதப்பட்டது.

புலியை முறத்தால் விரட்டிய சம்பவம் புறநானூற்றில் "புலியை முறத்தால் விரட்டிய வீரத்தமிழ் மங்கை" என்கிற வரிகள் வருகிறதாம்.  அப்போது நம்பவில்லை. ஆனால் இப்போது நம்பலாம் போலிருக்கிறது!

மும்பை ஆரே காலனியில் வசிப்பவர் மூதாட்டி நிர்மல் சிங். வயது 68. காலனியில் பால்பண்ணை வைத்திருக்கிறார். அருகே அடர்ந்த காடு. சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள இடம். அன்று இரவு 8.00 மணியளவில்  தனது வீட்டின் வெளியே உள்ள தின்னையில் ஊன்றுகோல் உதவியுடன்  நடந்து வந்து அமர்ந்தார். வீட்டின் புதர் அருகே சிறுத்தை ஒன்று ஒளிந்து கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. அவர் அமர்ந்த பின்னர் தீடீரென அந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்தது. அதனை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு தன்னிடம் இருந்த ஊன்றுகோலால் அந்த சிறுத்தையை எதிர்த்துப் போராடினார். மீண்டும் பாய நினைத்த சிறுத்தை ஊன்றுகோலுடன் எதிர்த்து நின்ற மூதாட்டியைப் பார்த்ததும் சிறுத்தை பின் வாங்கியது! புதரை நோக்கி ஓடிவிட்டது!

"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!" என்பார்கள். ஆபத்து நேரத்தில் ஊன்றுகோலும் உதவிக்கு வரும் என்பதை நிருபித்திருக்கிறார் மூதாட்டி நிர்மல் சிங். துணிவே துணை என்பார்கள். அந்த நேரத்தில் அவருக்குக் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருந்தாலும் கூட சிறுத்தை  அவரைச் சிதறடித்திருக்கும்!

நன்றி! விகடன்

No comments:

Post a Comment