சாலைகளில் உள்ள குண்டு குழிகளைப் பார்த்துப் பார்த்து நமக்கும் மனம் வெறுத்துப் போய்விட்டது! கார்களில் போனால் காருக்கு ஆபத்து! மோட்டார் சைக்களில் போனால் ஓட்டுபவருக்கு ஆபத்து! இது தாம் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி!
இப்போது அமைச்சரே இப்படி ஒரு சவால் விடுகிறார்! உங்களுடைய புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் உங்களுடைய புகார்கள் சரிசெய்யபடும் என்கிற உத்தரவாதத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். ஆமாம் மலேசியாவிலேயே தரமான சாலைகளைக் கொண்ட நகராகத் திகழ நாங்கள் விரும்புகிறோம் என்கிறார் அவர்.
ஆனால் நமக்கு ஒரு சின்ன சந்தேகம். 24 மணி நேரத்தில் சாலைகள் சீர் செய்யப்படும் என்றால் அந்த சாலைகள் 24 மணி நேரமாவது தாங்குமா? தாக்குப்பிடிக்குமா? அதனுடைய தரம் எப்படி இருக்கும் என்கிற கேள்வியெல்லாம் எழுகிறது! ஆமாம்! மிக நீண்ட நேரம் எடுத்துச் செய்யப் படுகின்ற சாலைகள் கூட 24 மணி நேரம் தாங்குவதில்லை! அந்த அளவுக்குத் தரக்குறைவான கட்டுமானப் பொருட்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன. தனியார் என்றால் தரம் பார்த்து வாங்குவார்கள். அரசாங்கம் என்றால் தரம் தேவையில்லை என்று அரசாங்கமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!
அதனால் தான் நமக்கு இப்படி ஒரு சந்தேகம்! அதனால் என்ன? அமைச்சர் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்திருப்பது நமக்கும் மகிழ்ச்சியே. இன்னொரு சின்ன சந்தேகம். இருபத்து நான்கு மணி நேரமும் "நேரமே" இல்லாமல் இருக்கும் இவர்கள் நமது தொலைபேசி அழைப்புகளை எடுப்பார்களா? எப்படியோ அவர்கள் எண்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவர்களிடம் மட்டுமே பேச வேண்டும் என நினைப்போர் அவர்களையே நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்:
Federal Territories Minister - Shahidan Kassim 019-4545111
Deputy Minister - Jalaludin Alias 019-6524444
Mayor - Mahadi Che Ngah 016-2068883
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு அமைச்சரை நாடாளுமன்றத்தில் திணறடித்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி. பிரபாகரனை வாழ்த்துகிறோம். அந்த கேள்விக்கு மிக நல்லதொரு நேர்மறையான பதிலைக் கொடுத்த அமைச்சரையும் பாராட்டுவோம்!
கேட்க நல்லாத்தான் இருக்கு! செயல்படுத்தினால் இன்னும் நல்லா இருக்கும்!
No comments:
Post a Comment