Wednesday 6 October 2021

நாம் இவர்களை என்ன செய்யலாம்?

                                                                     Foodpanda
 பொதுவாகவே தீபாவளி விளம்பரங்கள் வரும் போதே கூடவே இலவச இணைப்பாக ஒரு குறைபாடும் வந்துவிடுகிறது. தெரியாமல் வந்து விடுவதாக நினைக்க வழியில்லை. எல்லாம் தெரிந்தே தான் வருகிறது. 

தீபாவளியைக்  கொண்டாடுபவர்கள் இந்து மதத்தைச் சார்ந்த இந்தியர்கள் என்பது போய் மலாய்க்காரர்கள் தான் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்!

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உணவு விநியோக நிறுவனம் தான் தீபாவளியை இந்துக்கள் கொண்டாடுவதில்லை என்று சொல்லுவது போல் அமைந்திருக்கிறது இந்த விளம்பரம்.

தீபாவளி போன்ற கலாச்சார நிகழ்வுகளுக்கு யார் விளம்பரப்  படங்களை எடுக்க வேண்டும் என்பதில் நிறுவனங்களுக்கு ஒரு தெளிவு வேண்டும். நிச்சயமாக சீனர்களுக்கோ, மலாய்க்காரர்களுக்கோ இந்தியர்களின் கலாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்வதற்கு வழியில்லை. அதே போலத் தான்  இந்தியர்களும். நம்மால் சீனர், மலாய்க்காரர் கலாச்சாரங்களை ஏதோ அரைகுறையாகத் தெரியுமே தவிர  ஒரு விளம்பரப் படத்தை எடுக்கும் அளவுக்கு நம்மால் முடியாது.

ஆனால் சமீப காலங்களில் எல்லாமே எதிரும் புதிருமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது! இந்தியர்களின் கலாச்சார நிகழ்வுகளுக்கு யார் வேண்டுமானாலும் விளம்பரப் படங்கள் எடுக்கலாம் என்று யாரோ இவர்களுக்குத் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

இந்த Foodpanda நிறுவனம்  ஒரு தவறான வழியைக் காட்டியிருக்கிறது. இன்னும் விளம்பரங்கள் வரும். என்ன என்ன கூத்தடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை!

எதற்கும் மலேசிய இந்து இயக்கம் இப்போதே தயாராக வேண்டும். இல்லாவிட்டால் கேட்க ஆளில்லை என்று எதனையும் செய்யத் துணிவார்கள்! 

நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்! நம்மால் என்ன செய்ய முடியும்? முடிந்த அளவு எதிர்ப்பினைக் காட்டுவோம்!

No comments:

Post a Comment