அப்பாடா! ஆயி போயி, இப்பத்தான் வயிறு நல்லாருக்கு!
மிருகங்கள் செய்கின்ற சேட்டைகளை நமது முகநூல்களில் அடிக்கடி பார்க்கிறோம். மனிதனால் எந்த மிருகத்தையும் பழக்கிவிட முடியும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.
ஆனால் மேலே பார்க்கின்றோமே சிங்கம் அப்படியெல்லாம் பழக்கப்பட்ட சிங்கம் அல்ல. பழக்கப்பட்ட சிங்கம் என்பது, நம்மைப் பொறுத்தவரை, சர்க்கஸ்ஸில் பார்த்தோமே அதோடு சரி.
ஆனால் இந்த சிங்கம் பொது கழிப்பறைக்கு உள்ளே போய் பிறகு சாவகாசமாக வெளியே வருவதை நாம் பார்க்கிறோம்!
பாரதி சொன்னாரே: பாட்டுக்கு நான் ராஜா! காட்டுக்கு நீ ராஜா! இருவரும் கை குலுக்குவோமே! என்று கூறி கையை நீட்டினாராம்! நல்ல வேளை சிங்கம் கூண்டுக்குள் இருந்ததால் அவர் ஆசை நிறைவேறவில்லை!
சிங்கம் கழிவறையினுள் என்ன தான் செய்தது? சிங்கத்தின் நடவடிக்கையைப் பார்த்தால் அது கழிவறையில் மலம் கழித்துவிட்டு சாவகசமாக வெளியேறுவது போல் தான் தோன்றுகிறது! அதன் பின்னர் அது காட்டினுள் சென்று மறைந்துவிட்டது!
இது நடந்தது சௌராஷ்ரா, குஜாராத் மாநிலத்தின் காட்டுப் பகுதி ஒன்றில். வனப்பகுதியில் பயணம் செய்யும் குழுவினர் இதனைப் படம் பிடித்திருக்கின்றனர். அது அங்குப் பயணம் செய்பவர்களின் பயன்பாட்டுக்காக உள்ள பொது கழிப்பறை.
இப்போது நமக்கும் ஒரு சந்தேகம். பயணிகள் பயன்படுத்தும் இந்த கழிப்பறையை சிங்கங்களும் பயன்படுத்துகிறதோ! மனிதன் விலங்காகவும், விலங்கு மனிதனாகவும் மாறி வருகின்ற காலம் இதுவோ!
No comments:
Post a Comment