ஆனால் பெயர் மாற்றத்தினால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் நிதர்சனம். திருட்டுத்தனங்களோ கொள்ளையடித்தல்களோ எந்தவகையிலும் குறைந்தபாடில்லை!
அதுபற்றி நாம் நிறையவே பேசிவிட்டோம், எழுதிவிட்டோம்!
அடிக்கடி நம் காதுகளில் விழுகின்ற வார்த்தை ஒன்று "மாற்றியோசி!" சரி இப்படி யோசிப்போமே!
செடிக் அல்லது மித்ரா ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு விஷயம் பொது மக்களின் காதுகளுக்கு வந்து விட்டது. ரகசியம் எதுவுமில்லை. இந்தியர்களின் நலனுக்காக என்று ஒதுக்கப்பட்ட அந்த நிதி இதுவரை அது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அது மக்களுக்குச் சொல்லப்படவில்லை!
இந்த நிதியை எதிர்பார்த்து பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வியாபாரத் துறையில் இருப்பவர்கள் - சிறு வியாபாரியினர், நடுத்தரத் தொழிலர் மற்றும் மேல்மட்டத்தில் உள்ள மேல்மட்ட தொழிலதிபர்கள். அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் கடனுதவிகள் தேவைப்படுகின்றன.
ஆனால் இதில் அதிகம் நிதி உதவி தேவைப்படுவோர் சிறு வணிகர்கள்.
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் பயன்படுத்தாமல் திருப்பி அரசாங்கத்திற்கு அனுப்பட்ட பணம் பல கோடிகள் என்பது நமக்கு தெரியும். அதாவது "பெற்றுக்கொள்ள யாரும் இல்லை!" என்கிற காரணத்தினால் அந்த நிதி மீண்டும் அரசாங்கத்திற்கே திருப்பிவிடப்பட்டது!
அப்படி திருப்பிவிடப்பட்ட பணம் மீண்டும் ஏன் இந்தியர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக்கூடாது? திருப்பிவிடப்பட்ட பணம் இன்னும் அரசாங்கத்தில் தானே இருக்கிறது? சும்மா கிடக்கும் அந்தப் பணத்தை மீண்டும் இந்தியர்களின் நலனுக்குப் பயன்படுத்தலாமே! இப்போது கிடப்பில் போடப்பட்டிருக்கும் அந்தப் பணத்தை தூசி தட்டி எடுத்து தகுந்த ஆளை வைத்து வணிகர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன்.
பணம் இல்லை என்று கைவிரிக்க முடியாது இருக்கும் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment