பொதுவாகவே நகைப் பைத்தியம் என்றால் அது இந்தியப் பெண்கள் தான் முன்னணியில் நிற்பார்கள்! அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது நமது மலேசியாவாகட்டும் தங்கம் என்றால் இந்தியர்கள் தான்.
இந்நாட்டில் சீனர்கள் பணக்காரர்கள் என்கிற பெயர் உண்டு. மலாய்க்காரர்கள் நல்ல உத்தியோகங்களில் உள்ளவர்கள் என்கிற பெயர் உண்டு. மலேசியாவில் மூன்றவது பெரிய இனம் இந்தியர்கள். அது மட்டும் அல்ல. மற்ற இனத்தவர்களைவிட குறைவான வருமானத்தைப் பெறுபவர்கள் என்கிற ஒரு பெயரும் நமக்கு உண்டு.
ஆனால் தங்கம் என்று வரும் போது இந்தியப் பெண்கள் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்கிற பெயர் நமக்கு உண்டு. இப்போது உள்ள புதிய தலைமுறை கொஞ்சம் வித்தியாசமானவர்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
ஆனால் எல்லாவற்றையும் தூக்கி விழுங்கக்கூடிய ஒரு செய்தி. சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகளுக்கு அறுபது கிலோ தங்கத்தைப் போட்டு அழகு பார்த்திருக்கிறார் மணமகன்! நமக்குத் தெரிந்தவரை சீனர்கள் தங்கத்திற்காக அலைவதில்லை. பணம் என்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான் என்று நினைப்பவர்கள்.
அந்த அறுபது கிலோ தங்கத்தை போட்டுக் கொண்டு நடக்கக்கூட முடியாத சூழலில் மிகவும் சிரமப்பட்டு மணமேடைக்கு வந்திருக்கிறார்! மணமகளுக்கு இந்த அளவு தங்கம் தேவை தானா என்று தெரியவில்லை! ஆனால் மணமகன் அது தேவை என்பதால் தான் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். மணமகன் பெரும் பணக்காரர் என்பது தெரிகிறது!
இந்தியாவில் குஜாராத் மார்வாடிகளுக்கு இது போன்ற திருமணங்களில் தான் தங்களது செல்வத்தைக் காண்பிப்பதற்கான இடங்களாக அமைகின்றன! ஆனால் அவர்களில் கூட இப்படி அறுபது கிலோ தங்கத்தை மணமகள் சுமந்ததாக செய்திகள் இல்லை!
பரவாயில்லை! முடிந்தவன் பொன்முடி சூட நினைக்கிறான்! முடியாதவன் இருக்கும் தலைமுடியே போதும் என்கிறான்!
No comments:
Post a Comment