மலாக்கா மாநிலத் தேர்தல் வருகின்ற மாதம் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதெல்லாம் பழைய செய்திகள். ஏற்கனவே படித்துவிட்டோம்! புதிதாக ஏதேனும்.......உண்டா? உண்டு!
ஒன்று மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் 15-வது பொதுத் தேர்தலின் வெள்ளோட்டமாகப் பார்க்கப்படுகின்றது. எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது இந்த மாநிலத் தேர்தல் மூலம் ஓரளவு நம்மால் கணிக்கப்படும்.
ஆட்சி அமைப்பது அம்னோவின் தேசிய முன்னணியா அல்லது பக்காத்தான் கட்சியா அல்லது இன்னொரு புதிய கூட்டணியான பெரிகாத்தான் நேஷனலா - என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி. அம்னோ வழக்கமான தனது கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ தனித்துப் போட்டியிடும். எந்த மலாய்க் கட்சிகளுடனும் கூட்டுச் சேராது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது அந்தக்கால சிந்தனையுடன் அல்லது தனது முன்னாள் செல்வாக்குடன் நாம் இன்னும் இருக்கிறோமா என்று சோதித்துப் பார்க்க விரும்புகிறது.
அதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் பிரச்சாரத் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ கட்சியினருக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். அம்னோ கட்சியினர் அம்னோவின் செல்வாக்கு மட்டும் அல்ல நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கும் எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்க விரும்புகின்றனர்.
நஜிப் பல வழக்குகளினால் பல சிக்கல்களை எதிர்நோக்குகிறார். எல்லாம் ஊழல் பிரச்சனைகள். ஆனால் தனக்கு இன்னும் மலாய்க்காரர்களின் ஆதரவும் மலாய்க்காரரிடையே செல்வாக்கும் இருப்பதாக நம்புகிறார். அதனை எப்படி உறுதிப்படுத்துவது? அதற்கு இந்த மாநிலத் தேர்தல் அவருக்கு ஒரு சோதனைக்களமாக விளங்கக்கூடும்.
இந்த மாநிலத் தேர்தலின் அம்னோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நஜிப் ரசாக் மலேசிய அரசியலில் மீண்டும் ஜொலிப்பார் என்று நம்பலாம். அப்படி தோல்வி அடைந்தால் அத்தோடு அவருடைய அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்!
அம்னோ கட்சியினருக்கு எல்லா வகையிலும் இந்தத் தேர்தல் ஒரு வெள்ளோட்டம்!
No comments:
Post a Comment