இயக்குனர் கௌதமனின் "பிக் போஸ்" பற்றியான கருத்து சரியானது தானா?
பதில்
சரியானது என்பதாகவே நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். இப்போது அந்நிகழ்ச்சி மூன்றாவது பருவத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியிலிருந்தே நான் அதனை பார்க்கவில்லை. முதலாவது பருவத்தில் கிடைத்த வெற்றி இரண்டாவது பருவத்தில் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்தப் பருவத்தில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகக் கவர்ச்சியைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி என்றால் அது சினிமா என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு என்ன சொல்ல!
இப்போது கௌதமன் சொன்ன கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அது ஒரு சினிமா நிகழ்ச்சி என்பதாகவே முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சினிமாவுக்கு என்ன என்ன தேவையோ அவை அனைத்தும் அதில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் இடம் பெறும் ஆடை அலங்காரங்களைத் தான் அந்த நடிகர்கள் வீட்டிலும் பயன் படுத்துகிறார்களா என்பது நல்ல கேள்வி! வீட்டில் பயன்படுத்த முடியாத உடைகளை நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது சினிமா தானே!
இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் கமலஹாசன் சாதிக்கப் போவது என்ன? வருங்காலங்களில் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று கனவு காணும் கமல் இப்படியெல்லாம் நிகழ்ச்சிகளை நடத்தி அவர் எப்படி அரசியலில் பெயர் போடப் போகிறார்? இது போன்ற நிகழ்ச்சிகள் அவருக்கு எந்த அளவில் அரசியலுக்கு உதவும்?
இன்றைய தமிழக அரசியல்வாதிகள் தமிழர்களைக் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் சாராயக் கடைகளைத் திறந்து தமிழனைத் தலை நிமிராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுகிறார்கள்! இப்போது கமலும் தமிழக அரசியல்வதிகளோடு சேர்ந்து ஆபாசத்தை மக்களிடையே விதைத்துக் கொண்டிருக்கிறார்! அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழர்கள் எல்லாக் காலங்களிலும் அடிமைகளாகவே வாழ வேண்டும் என்கிற நோக்கம் கமலுக்கும் உண்டு
கமல் சினிமா நடிகனாகவே இருந்தால் "இது தான் ஒரு கூத்தாடியின் நோக்கம்" என்று விட்டுவிடலாம். ஆனால் தன்னை ஓர் அரசியல் தலைவன் என்று பிரகனப்படுத்தும் கமல் மக்களுக்கு ஏற்கக் கூடாத ஒன்றை வலிந்து திணித்து வருகிறார்
இயக்குநர் கௌதமன் சொல்லுவது சரிதான். கமலை எப்படி ஓர் அரசியல் தலைவராக பார்ப்பது?

No comments:
Post a Comment