செடிக் பற்றியான செய்திகளை வைத்துக் கொண்டு இப்போது நாடும் பூராவும் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது!
ஆனால் இந்தச் சத்தம் எல்லாம் ஏற்கனவே கேட்கப்பட்ட சத்தங்கள் தான். ஒன்றும் புதிதல்ல! ஒரு வித்தியாசம். அப்போது யார் திருடர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இனி அதெல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.
பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருடர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது என்பது எளிதல்ல. இப்போது இவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் ஒரு வேளை நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கலாம்! பெரிய, மகாப்பெரிய திருடர்களைத் தெரிந்து கொள்ளுவதில் யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது! ஏற்கனவே இவர்களைப் பெற்றவர்கள் "சான்றோன்" எனக் காது குளிர கேட்டுவிட்டார்கள்! இப்போது நம்முடைய நேரம்!
இந்த நேரத்தில் மனதில் ஒரு சிறிய வருத்தம். இந்த செடிக் விவாகாரத்தில் கல்வியாளர் பேராசிரியர் ராஜேந்திரன் பெயரும் அடிபடும் போது நமக்கு வருத்தமாகவே இருக்கிறது. ராஜேந்திரன் ஒரு கல்வியாளர். அவர் இந்த அரசியல் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு அவரும் சேர்ந்து பொய்ச் சொல்ல வேண்டிய ஒரு சூழல் ஏற்பாட்டிருப்பது நமக்கும் வேதனையைத் தருகிறது.
ராஜேந்திரன் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அவர் இருந்தால் சமுதாயத்திற்கு நல்லது நடக்கும் என மக்கள் நம்பினர். ஒரு கல்வியாளர் என்கிற அடையாளம் சமுதாயத்தில் அவருக்கு நல்ல பெயரைக் கொண்டு வந்தது. கடைசியாக அவர் இந்த ம.இ.கா. கழிசடையர்களிடம் போய் மாட்டிக் கொண்டார்! அது திருட்டுக் கூட்டம் எனத் தெரிந்தும் அவர்களின் வலையில் போய்ச் சிக்கிக் கொண்டார். அவர் ஜாதகம் அப்ப்டி என்றால் யார் என்ன செய்ய முடியும்?
இப்போது நாம் நம்பியிருப்பதெல்லாம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்திபா கோயா வைத்தான். இவரை நாம் நம்புகிறோம். அவரைத் தான் நாம் நம்புகிறோம். நமக்கும் தெரியும். இதில் எத்தனை பேர் மருத்துவமனையில் படுத்திருப்பார்கள், எத்தனை பேர் வேளிநாடுகளுக்கு நடையைக் கட்டுவார்கள் என்பதையெல்லாம் ஓரளவு நம்மால் ஊகித்து அறியலாம்!
இவ்வளவு காலம் சட்டத்தை இருட்டறையில் போட்டு அடைத்து வைத்திருந்தார்கள்! இப்போது தான் சட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
ம.இ.கா. இந்தியர்களைக் காப்பாற்றும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. லத்திபா கோயா தான் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும்!
No comments:
Post a Comment