இன்றைய நிலையில் எதிர்கட்சியினர் மிகவும் விரும்புகின்ற ஒரு சொல்: "அடுத்தாண்டு தேர்தல் வரும்!" என்பது தான்.
தேர்தல் வரும் என்று நாம் சொல்லவில்லை ஆனால் எதிர்கட்சியினர் அவசியம் தேர்தல் வரும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக அம்னோவும் பாஸ் கட்சியும் தேர்தல் வரும் என்று அடித்துச் சொல்லுகின்றனர்!
சொல்லப்படுகின்ற காரணங்கள் நமக்குப் பலவீனங்களாகத் தெரியலாம்! ஆனால் அவர்களுக்கோ அது தான் பலம்!
அப்படி என்ன தான் அவர்கள் சொல்லுகின்றார்கள். அவர்கள் சொல்லுவதெல்லாம் டாக்டர் மகாதிர் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க மாட்டார். ஒப்படைப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்துவார் என்பது தான அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள்!
இவர்கள் சொல்லுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும்? நமக்குத் தெரியவில்லை! பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. பணம் கையாடல் செய்ததினால் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. நஜிப்பைப் போல மகாதிர் பொறுப்பற்ற மனிதர் அல்ல. முதலில் பணம் வீண் விரயம் ஆவதை அவர் விரும்பமாட்டார். ஒரு தேர்தல் நடத்துவது என்பது கோடிக்கணக்கில் பணத்தை வீணடிக்கிற விஷயம் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். மறு தேர்தல் என்பதற்குச் சாத்தியல் இல்லை. அந்தத் தவற்றினை டாக்டர் மகாதிர் ஒருக்காலும் செய்ய மாட்டார் என்பதை உறுதியாக நம்பலாம்.
எந்த அடிப்படையில் பொதுத் தேர்தல் வரும் என இவர்கள் நம்புகிறார்கள்? உண்மையில் இவர்கள் நம்பவில்லை! அது தான் உண்மை! ஏன் நம்பவில்லை? டாக்டர் மகாதிர் அது போன்ற தவற்றினைச் செய்ய மாட்டார் என்பது அவர்களுக்கே தெரியும்! ஆனாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்லுவதற்குக் காரணங்கள் உண்டு. ஆளுங்கட்சியான பக்காத்தான் ஒரு பலவீனமான கட்சி என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுவதன் மூலம் மலாய்க்காரர்களிடம் அவர்கள் தங்களை விட்டால் வேறு யாரும் நாட்டை வழி நடத்த முடியாது என்பதைச் சொல்லிச் சொல்லி தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளுகிறார்கள்! அவ்வள்வு தான்! இந்தத் தொடர் தாக்குதல் மூலம் தங்களால் மட்டும் தான் - அம்னோ பாஸ் - ஸால் மட்டும் தான் நாட்டை ஆள முடியும் என்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்!
பொதுவாக பாஸ்- அம்னோ இரு கட்சிகளுமே அழிவுச் சக்திகள் என்பதை நாம் அறிவோம். மலாய்க்காரர்கள் மட்டும் அறியாதவர்களா? அவர்களும் அறிந்தவர்கள் தான். பக்காத்தான் அரசாங்கம் தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்கிறார்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசாங்கத்தின் நோக்கமே அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். அவர்கள் யாருடைய உரிமைகளையும் பறித்து விட விரும்பவில்லை. அது நடக்காது என்பதும் தெரியும்.
நீதி, நேர்மை என்பதெல்லாம்அம்னோ-பாஸ் கட்சிகளிடம் கிடையாது! இரு கட்சிகளுமே ஊழக்குப் பேர் போனவை!
அடுத்த ஆண்டு தேர்தல் வருமா? வரவே வராது என்பது தான் பதில்!
No comments:
Post a Comment