"மித்ரா" நிதியகத்திற்குத் தலைமை தாங்குபவர் பொன்.வேதமூர்த்தி.
சில நாள்களுக்கு முன்னர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் மித்ராவால் "இந்தியர்களின் முன்னேற்ற" த்திற்காக வழங்கப்பட்ட பணம் பற்றியான விளக்கங்களைக் கேட்டிருந்தார். கேட்டவர் இராமசாமியாக இருக்கலாம். ஆனால்அது பொது மக்களின் கேள்வி. நாங்கள் அதே கேள்வியைக் கேட்டால் அது முக்கியத்துவம் பெறாது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய்தில்லை.
ஆனால் அவர் கேட்டதற்கான வேதமூர்த்தியின் பதில் சரியானதாக இல்லை. அவருடைய பதில் ஒரே மழுப்பலைத் தவிர வேறொன்றொமில்லை!
நாங்கள் யாரும் வேதமூர்த்தியின் நேர்மையைப் பற்றி சந்தேகப்படவில்லை. அவர் இந்திய சமூகத்தின் நலனுக்கு எதிராக செயல்படுவார் என்று நாங்கள் யாரும் நம்பவில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னை தாழ்த்திக் கொள்ளுவார் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
ஒன்றை வேதமூர்த்தி புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகம் ம.இ.கா. என்னும் அரக்கக் குணம் பாடைத்தவர்களால் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வந்த சமூகம். நாங்கள் ஏமாந்தது கொஞ்ச நஞ்சம் அல்ல. அதானால் தான் இப்போது யாரைப் பார்த்தாலும் சந்தேகக் க்ண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. நீங்கள் மட்டும் அல்ல. அரசாங்த்தில் அங்கம் வகிக்கும் ஏனைய இந்தியத் தலைவர்களையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டியுள்ளது. இதனை நீங்கள் கட்சி கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம். உண்மையைச் சொன்னால் அனைத்துக் கட்சியினருடன் சேர்ந்து நீங்கள் ஆலோசனைப் பெற்றிருக்க வேண்டும். தனிக்காட்டு ராஜா என்றெல்லாம் உங்களை நீங்களே நினைத்துக் கொள்ளக் கூடாது. சென்ற முறை நீங்கள் பதவியில் இருந்த போது ம.இ.கா. உங்களோடு ஒத்துழைக்கவில்லை. அப்போது அவர்கள் தனிக்காட்டுத் திருடர்களாக இருந்தார்கள்! ஆனால் இப்போது நீங்கள் தான் இவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். இந்திய சமூகத்தின் நல்வாழ்வுக்காக உங்களால் ஒத்துழைக்க முடியாதா?
கேள்விக்கான பதிலைச் சொல்லாமல் நீங்கள் ஏன் மௌனம் காட்டுகிறீர்கள்? அது எங்களுக்குச் சந்தேகத்தைத் தானே ஏற்படுத்தும். உங்களைக் கேள்வி கேட்பதைவிட நேரடியாகச் சந்தித்திருக்கலாம் என்கிறீர்கள். இல்லாவிட்டால் தொலைப்பேசியில் அழைத்திருக்கலாம் என்கிறீர்கள்! இது போன்ற பதில்கள் உங்களிடமிருந்து வரும் போது நீங்கள் இந்த சமுதாயத்தை ஏமாற்ற நினைப்பதாகத் தானே நாங்கள் நினைக்க வேண்டியுள்ளது! ஏதோ உங்களின் புதிய கட்சிக்குத் தாரை வார்த்து விட்டீர்களோ என்றெல்லாம் சந்தேகப்பட வேண்டியுள்ளதே!
சார்! உங்கள் நிலைப்பாடு சரியில்லை!
No comments:
Post a Comment