நாம் என்ன சொல்லுகிறோமோ அதனைத் தான் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங்கும் கூறுகிறார்.
ஆமாம் நாட்டின் சீர்கேடுகளைக் களைந்து நாட்டை சீரான நிலைக்குக் கொண்டு வர பிரதமர் மகாதிருக்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கலாம். எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. காரணம் முன்னாள் பிரதமர் நஜிப்பின் திருவிளையாடுகள் - திருட்டுத்தனங்கள் அனத்தையும் குறுகிய காலத்தில் சீர் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல! நாட்டையே அழிவு பாதைக்கு இட்டுச் சென்றவர் நஜிப். சீர் செய்வது என்பது ஒர் இமாலய முயற்சி. அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நாடு மீண்டும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என தைரியமாகச் சொல்லலாம்.
ஆனால் இதற்கும் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டையும் போட்டுக் குழப்ப வேண்டிய அவசியமுமில்லை.
ஒரு சிலர், பிரதமர் மகாதிரின் மகன், முக்ரிஸ் மகாதிர் உட்பட தேவையற்ற பிரச்சனைகளைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் வேண்டியவர், வேண்டாதவர் என்பதெல்லாம் மிகவும் சாதாரணம். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை "அப்படி ஒன்று இல்லவே இல்லை!" என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.
பேசப்பட்ட ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும். மரியாதைக் கொடுக்கப்பட வேண்டும். அடுத்த பிரதமர் அன்வார் என்பது பொதுத் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதி. எழுத்துப் பூர்வமாக ஒன்றும் இல்லை என்று பேசுவது சிறுபிள்ளைத்தனம். இப்போது எழுத்துப் பூர்வமாக ஒன்றுமில்லை என்று பேசுபவர்கள் ஏன் அன்றே அதனை எழுத்துப் பூர்வாமக செய்திருக்கலாமே!
இதுவெல்லாம் அறிவற்றவர்களின் பேச்சு என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பேசுபவர்கள் டாக்டர் மகாதிரை அவமதிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். தனது பதவியை அன்வாரிடம் தான் ஒப்படைப்பேன் என்று அன்றே அவர் கூறியிருக்கிறார். அப்போது பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகள் என்பதாகப் பிரமாதப்படுத்தின!.
இப்போதோ எந்த ஒப்பந்தமும் இல்லை, அப்படிப் பேசவும் இல்லை என்பது போல் பேசுவது கிறுக்குத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லுவது? நாட்டை சீர்படுத்த இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கலாம் அதுவரை பொறுத்திருங்கள் என்று சொல்லுவது வேறு! ஆனால் முக்ரிஸ் போன்றவர்களின் பேச்சு தேவை இல்லாதது!
லிம் கிட் சியாங் சொல்லுவது சரிதான்!
No comments:
Post a Comment