தமிழர்களிடையே எத்தனையோ ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள், நம்பிக்கைகள் காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஒரு சில விஷயங்கள் நாம் கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆமாம் நாம் நவீனத்திற்குப் போய்விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பார்க்கப் போனால் ஒரு மண்ணுமில்லை! அந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போய் விட்டதாகவும் சொல்ல முடியவில்லை.
தமிழ் நாட்டில், திருத்தணி அருகே உள்ளே நாராயணபுரம் என்னும் கிராமத்தில் உள்ளவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு.
தொடர்ந்தாற் போல பெண் குழைந்தை பிறந்து "இனி பெண் குழைந்தை வேண்டாம்" என்று பெற்றோர்கள் முடிவு செய்தால் பிறந்த அந்தக் கடைசிக் குழைந்தைக்கு "வேண்டாம்" என்று பெயர் வைப்பார்களாம்! அதாவது அதன் பின்னர் அவர்களுக்கு ஆண் குழைந்தை தான் பிறக்குமாம்! அது தான் அவர்களின் நம்பிக்கை! நம்மால் இதை நம்ப முடிகிறதா? இதில் ஏதும் விஞ்ஞானம் இருக்கிறதா? அறிவியில் இருக்கிறதா? ஒன்றுமில்லை! ஆனால் அது நடக்கிறதே! என்ன சொல்ல?
அந்தக் கிராமத்தில் ஏகப்பட்ட "வேண்டாம்" என்னும் பெயரில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களாம்! அதனால் அவர்கள் மாணவ, மாணவியரிடம் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
இப்போது ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பெற்றோர்களால் வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு மாணவி "இனி பெண் குழந்தை வேண்டாம்" என்று சொன்னாலும் அந்தப் பிறந்த குழந்தைக்கு அவர்கள் கல்வியைக் கொடுக்கத் தயங்கவில்லை. இப்போது சென்னை அருகே உள்ள ஒரு இஞ்ஞினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் அந்த மாணவி சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நேர்காணலில் ஒரு ஜப்பான் நிறுவனத்தால் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் கல்வி முடிவடைகிறது. கல்வி முடிவடைந்ததும் அந்த ஜப்பான் நிறுவனத்தில் வேலை செய்ய அவருக்கு ஆண்டுக்கு 23 இலட்சம் ரூபாய் சம்பளத்தில் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
தனது பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர் இனி தனது பெயரை மாற்றப் போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார், "அது அப்படியே இருக்கட்டும்" என்கிறார். பெற்றோர்கள் இனி இது போன்ற பெயர்களை வைக்க வேண்டாம் என்பது தான் அவரின் வேண்டுகோள்.
இனி அந்த கிராமத்தில் இது போன்ற பெயர்கள் எடுபடாது என நம்புவோம்!
No comments:
Post a Comment